பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு
Potassium hypochlorite
பொட்டசியம் ஐப்போகுளோரைட்டு
இனங்காட்டிகள்
7778-66-7 Y
ChemSpider 56409 Y
EC number 231-909-2
InChI
  • InChI=1/ClO.K/c1-2;/q-1;+1
    Key: SATVIFGJTRRDQU-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23665762
SMILES
  • [K+].[O-]Cl
UNII G27K3AQ7DW Y
UN number 1791
பண்புகள்
KClO
வாய்ப்பாட்டு எடை 90.55 கிராம்/மோல்
தோற்றம் வெளிர் சாம்பல் நீர்மம்
மணம் குளோரின் போன்ர நெடி
அடர்த்தி 1.160 கிராம்/செ.மீ3
உருகுநிலை −2 °C (28 °F; 271 K)
கொதிநிலை 102 °C (216 °F; 375 K) (சிதையும்)
25%
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
R-சொற்றொடர்கள் R22, R31
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45, S46
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் குளோரைடு
பொட்டாசியம் குளோரைட்டு
பொட்டாசியம் குளோரேட்டு
பொட்டாசியம் பெர்குளோரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஐப்போகுளோரைட்டு
இலித்தியம் ஐப்போகுளோரைட்டு
கால்சியம் ஐப்போகுளோரைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு (Potassium hypochlorite) என்பது KClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐப்போ குளோரசு அமிலத்தின் பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு எனப்படுகிறது. பல்வேறு வேறுபட்ட அடர்த்திகளில் இதைப் பயன்படுத்தப்படுகிறார்கள். பொதுவாக பெரும்பாலும் நீர்த்த தண்ணீர் கரைசலில் பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு பயன்படுகிறது. வெளிர் சாம்பல் நிறத்தில் வலிமையான குளோரின் நெடியுடன் காணப்படும் இச்சேர்மம் தொற்று நீக்கியாகப் பயன்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலுடன் குளோரின் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு உருவாகிறது :[1]

Cl2 + 2 KOH → KCl + KClO + H2O

பாரம்பரியமான இத்தயாரிப்பு முறை முதன்முதலில் 1789 ஆம் ஆண்டில் கிளாடு இலூயிசு பெர்த்தோலெட்டு என்பவரால் பயன்படுத்தப்பட்டது [2].

பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற்பகுப்பு செய்தும் பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு தயாரிக்கலாம். இவ்விரு தயாரிப்பு முறைகளிலும், பொட்டாசியம் குளோரேட்டு சேர்மம் உருவாவதைத் தவிர்க்க வினைபடு பொருள்களின் கலவை குளிர்ச்சியான நிலையில் வைக்கப்படுகிறது.

பயன்கள்[தொகு]

மேற்பரப்புகளைச் சுத்தம் செய்யவும் குடி தண்ணீரில் தொற்று நீக்கவும் பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதன் சீரழிவில் சோடியம் குளோரைடுக்குப் பதிலாக பொட்டாசியம் குளோரைடை விட்டுச் செல்கிறது. வேளாண் துறையிலும் மண்ணுடன் பொட்டாசியம் சேர்ப்பது விரும்பப்படுகிறது [3].

வரலாறு[தொகு]

பிரான்சு நாட்டின் பாரிசு நகர யாவெல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிளாடு இலூயிசு பெர்த்தோலெட்டு என்பவரின் ஆய்வகத்தில் 1789 ஆம் ஆண்டில் பொட்டாசியம் ஐப்போ குளோரைட்டு முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. குளோரின் வாயுவை பொட்டாசு கடுங்கார நீரில் செலுத்தி இதைத் தயாரித்தார். இம்முறையில் உருவான நீர்மம் யாவெல் நீர் என அழைக்கப்பட்டது. இக்கரைசல் பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டின் வலுவற்ற கரைசலாக இருந்தது. தயாரிப்பு முறையில் காணப்பட்ட இடர்பாடுகளால் பொட்டாசியத்திற்குப் பதிலாக சோடியம் தயாரிப்பு முறையில் பயன்படுத்தப்பட்டு சோடியம் ஐப்போகுளோரைட்டு தயாரிக்கப்பட்டு தற்போது பரவலாக தொற்று நீக்கியாகப் பயன்படுகிறது.

நச்சியலும் பாதுகாப்பும்[தொகு]

சோடியம் ஐப்போகுளோரைட்டு போலவே பொடாசியம் ஐப்போகுளோரைட்டும் எரிச்சலூட்டும். தோல், கண்கள், சளிச்சவ்வு போன்றவற்றில் பட நேர்ந்தால் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் [4]. பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டைச் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுக்குழாயில் கடும் எரிச்சல், சுவாசிப்பதில் இடையூறு, நுரையீரல் நீர்க்கோர்வை போன்ற பாதிப்புகளும் அடர் கரைசலாக உட்செலுத்தப்பட்டால் உயிர் போகும் அபாயம் கூட உண்டாகலாம் [5].

யூரியா, அமோனியம் உப்புகள் உள்ளிட்ட எண்ணற்ற வேதிப்பொருட்களுடன் வெடித்தலுடன் வினைபுரிகிறது என்றாலும், பொட்டாசியம் ஐப்போகுளோரைட்டை ஒரு வெடிபொருளாகவோ [5] தீப்பற்றும் பொருளாகவோ கருதுவதில்லை. மெத்தனால், அசிட்டைலீன், மற்றும் பல கரிமச் சேர்மங்களை இதனுடன் சேர்த்து சூடுபடுத்துவதாலும் அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்துவதாலும் நச்சுமிக்க குளோரின்வாயி உற்பத்தியாகிறது [6].

மேற்கோள்கள்[தொகு]

  1. Uri Zoller, Paul Sosis. Handbook of Detergents, Part F: Production. CRC Press. பக். 452. https://books.google.com/books?id=dXn3aB1DKk4C&pg=PA452. பார்த்த நாள்: 4 May 2016. 
  2. Helmut Vogt; Jan Balej; John E. Bennett; Peter Wintzer; Saeed Akhbar Sheikh; Patrizio Gallone (2007), "Chlorine Oxides and Chlorine Oxygen Acids", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 2
  3. "Enviro Klor: 12.5% POTASSIUM HYPOCHLORITE BLEACH ALTERNATIVE" இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140915073111/http://www.envirotech.com/pdf/EnviroKlor.pdf. பார்த்த நாள்: 14 September 2014. 
  4. , Environmental Protection Agency.2 March 2011.
  5. 5.0 5.1 "Material Safety Data Sheet: Potassium Hypochlorite" இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819090134/http://www.kasteelchemicals.com/tinymce/filemanager/files/pot_hypo.pdf. பார்த்த நாள்: 15 September 2014. 
  6. "Potassium Hypochlorite". http://www.chemicalbook.com/ChemicalProductProperty_EN_CB8332697.htm. பார்த்த நாள்: 15 September 2014.