பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு(IV), இருபொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு, தைட்டானியம் பொட்டாசியம் அறுபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
16919-27-0 | |
ChemSpider | 9239654 |
EC number | 240-969-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11064502 |
| |
பண்புகள் | |
F6K2Ti | |
வாய்ப்பாட்டு எடை | 240.05 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
உருகுநிலை | 780 °C (1,440 °F; 1,050 K) |
கொதிநிலை | 235–237 °C (455–459 °F; 508–510 K) |
சூடான நீரில் கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
வார்ப்புரு:HPhrases | |
வார்ப்புரு:PPhrases | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு (Potassium hexafluorotitanate) என்பது K2TiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம், புளோரின், தைட்டானியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3]
தயாரிப்பு
[தொகு]ஐதரோபுளோரிக் அமிலம் மெட்டாதைட்டானிக் அமிலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து புளோரோதைட்டானிக் அமிலத்தை உருவாக்குகிறது; பின்னர் இது பொட்டாசியம் ஐதராக்சைடுடன் நடுநிலையாக்கல் வினையில் ஈடுபட்டு பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெள்ளை நிறத் தூளாக பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு உருவாகிறது.[4] இது சூடான நீரில் கரையும். கனிம அமிலங்களிலும் குளிர்ந்த நீரிலும் சிறிதளவு கரையும். அம்மோனியாவில் கரையாது.[5]
வேதிப் பண்புகள்
[தொகு]சோடியத்துடன் வினைபுரிந்து சோடியம் மோனோபுளோரைடையும் , பொட்டாசியத்துடன் வினைபுரிந்து பொட்டாசியம் மோனோபுளோரைடையும் கொடுக்கும்.:[6][7]
-
- K2TiF6 + 4Na → Ti + 2KF + 4NaF
பயன்கள்
[தொகு]பொட்டாசியம் அறுபுளோரோதைட்டனேட்டு ஒரு பகுப்பாய்வு மறுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தைட்டானிக் அமிலம் மற்றும் உலோக தைட்டானியம் ஆகியவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாலிபுரோப்பைலீன் தொகுப்பு வினையில் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. உலோக பாசுப்பேட்டு மேற்பரப்பு சரிசெய்தல் செயல்முறையின் ஓர் அங்கமாகவும் உள்ளது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dipotassium hexafluorotitanate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Potassium hexafluorotitanate(IV)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Potassium Hexafluorotitanate(IV)". American Elements (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Potassium hexafluorotitanate, 97%, Thermo Scientific Chemicals". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "The reaction of interaction of hexafluorotitanate and sodium with the formation of the titanium, potassium fluoride and sodium fluoride". chemiday.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Ermakov, A. A.; Kliment'Eva, G. A.; Andrianov, A. M.; Brusilovskii, Yu. E.; Kovalevskaya, I. P. (28 January 1997). "ChemInform Abstract: Reaction of Potassium Hexafluorotitanate with Sodium, Potassium and Ammonium Hydroxides and Carbonates.". ChemInform 28 (5). doi:10.1002/chin.199705020. https://www.researchgate.net/publication/250562232.
- ↑ "POTASSIUM HEXAFLUOROTITANATE(IV)". chembk.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.