பென்சைல் பொட்டாசியம்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
பொட்டாசியம் பென்சைல் | |
| இனங்காட்டிகள் | |
| 2785-29-7 | |
| பண்புகள் | |
| C7H7K | |
| வாய்ப்பாட்டு எடை | 130.23 |
| தோற்றம் | ஆரஞ்சு நிறத்திண்மம் |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
காற்றில் எரியும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பென்சைல் பொட்டாசியம் (Benzyl potassium ) என்பது C6H5CH2K. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம பொட்டாசியம் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் ஐதரோ கார்பன் கரைப்பான்களுடன் மட்டும் ஒரு வலிமையான காரமாகச் செயல்படுகிறது. P – தொலைல் சோடியம் வழியாக இருபடி நிலைகளில் உலோக ஈனிமாற்ற வினையின் மூலம் பென்சைல் பொட்டாசியம் தயாரிப்பதே அசலான தயாரிப்பு முறையாகும்:[1]
- (CH3C6H4)2Hg + 2 K → 2 CH3C6H4K + Hg
- CH3C6H4K → KCH2C6H5
தற்கால நவீனமுறைகளில், பியூட்டைல் இலித்தியம், பொட்டாசியம் முப்-பியூட்டாக்சைடு மற்றும் தொலுயீன் சேர்ந்த தொகுப்பு வினை பயன்படுத்தப்படுகிறது[2] . பொட்டாசியம் உப்புகளைத் தயாரிக்க உதவும் வலிமையான காரமாக ஒட்டாசியம் ஐதரைடையும் பயன்படுத்தமுடியும். பென்சைல் பொட்டாசியம் மூலக்கூறு நிலையில் காணப்படுவதால் வினையில் வேகமாகச் செயல்படும் வாய்ப்பைப் பெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gilman, Henry; Pacevitz, Henry A.; Baine, Ogden "Benzylalkali Compounds" Journal of the American Chemical Society 1940, vol. 62, pp. 1514-20. எஆசு:10.1021/ja01863a054
- ↑ Philip J. Bailey, Robert A. Coxall, Caroline M. Dick, Sylvie Fabre, Louise C. Henderson, Christian Herber, Stephen T. Liddle, Daniel Loroño-Gonzālez, Andrew Parkin, Simon Parsons "The First Structural Characterisation of a Group 2 Metal Alkylperoxide Complex: Comments on the Cleavage of Dioxygen by Magnesium Alkyl Complexes" Chemistry, European Journal 2003, vol. 9, pp. 4820 ± 4828. எஆசு:10.1002/chem.200305053