காட்மியம் பாசுபைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
முக்காட்மியம் இருபாசுபைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12014-28-7 | |
| ChemSpider | 140173 |
| EC number | 234-595-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 159393 |
| |
| பண்புகள் | |
| Cd3P2 | |
| வாய்ப்பாட்டு எடை | 399.178 கி/மோல் |
| தோற்றம் | நீலங்கலந்த வெண்மை[1] அல்லது சாம்பல் நிறம்[2] |
| அடர்த்தி | 5.96 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 700[1] °C (1,292 °F; 973 K) |
| எதிர்மின்னி நகாமை | 1500 செ.மீ2/Vs[1] |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 3.88[1] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணகம் |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H302, H312, H314, H318, H332, H350, H370, H400, H410 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P201, P202, P210, P233, P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+340, P308+313 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
காட்மியம் பாசுபைடு (Cadmium phosphide) Cd3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல் அல்லது நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக காணப்படுகிறது. 0.5 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியைக் கொண்டுள்ள ஒரு குறைக்கடத்திப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூச்சிக்கொல்லியாகவும், சீரொளி இருமுனையங்களுக்கான பொருளாகவும், உயர்-சக்தி-உயர் அதிர்வெண் மின்னணுவியலிலும் காட்மியம் பாசுபைடு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[1] முக்காட்மியம் இருபாசுபைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.
தயாரிப்பு
[தொகு]காட்மியத்துடன் பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் காட்மியம் பாசுபைடை தயாரிக்கலாம்.
- 3 Cd + 2 P → Cd3P2
கட்டமைப்பு
[தொகு]அறைவெப்ப நிலையில் காட்மியம் பாசுபைடு நாற்கோணக கட்டமைப்பில் காணப்படுகிறது.
துத்தநாக பாசுபைடு (Zn3P2), காட்மியம் ஆர்சனைடு (Cd3As2), துத்தநாக ஆர்சனைடு (Zn3As2) ஆகிய சேர்மங்களின் படிகக் கட்டமைப்பை காட்மியம் பாசுபைடின் படிகக் கட்டமைப்பும் ஒத்திருக்கிறது. Zn-Cd-P-As நான்கிணைய அமைப்பில் இந்த சேர்மங்கள் முழு தொடர்ச்சியான திண்ம-கரைசலை வெளிப்படுத்துகின்றன.[3]
பாதுகாப்பு
[தொகு]மற்ற உலோக பாசுபைடுகளைப் போலவே, காட்மியம் பாசுபைடும் நச்சுத்தன்மை மிக்கதாகும். ஏனெனில் விழுங்க நேர்ந்தால் இது இரைப்பை அமிலத்துடன் வினைபுரிந்து பாசுபீன் வாயுவை உருவாக்கும். காட்மியத்தின் நச்சுத்தன்மை காரணமாக தோல், கண்கள் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஆபத்தானதாகும். புற்றுநோய்க் காரணியாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 "Cadmium Phosphide (Cd3P2) Semiconductors". azom.com. 2013-08-19. Archived from the original on 2020-10-30. Retrieved 2020-10-25.
- ↑ "Cadmium Phosphide Cd3P2". americanelements.com. Retrieved 2020-10-25.
- ↑ Trukhan, V. M.; Izotov, A. D.; Shoukavaya, T. V. (2014). "Compounds and solid solutions of the Zn-Cd-P-As system in semiconductor electronics". Inorganic Materials 50 (9): 868–873. doi:10.1134/S0020168514090143.