காட்மியம் குரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்மியம் குரோமேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம்(2+);டையாக்சைடு(டையாக்சோ) குரோமியம்
இனங்காட்டிகள்
ChemSpider 14560858
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20065476
பண்புகள்
CdCrO4
வாய்ப்பாட்டு எடை 228.405
தோற்றம் மஞ்சள் நிற சாய்சதுரப் படிகங்கள்
அடர்த்தி 4.5 கி/செ.மீ^3
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1027] TWA 0.005 மி.கி/மீ3 (Cd)யாக)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[1]
உடனடி அபாயம்
Ca [9 மி.கி/மீ3 (Cd) யாக][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

காட்மியம் குரோமேட்டு (Cadmium chromate) என்பது CdCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமேட்டு சேர்மப்பூச்சுடன் தொடர்புடைய இச்சேர்மம், அலுமினியம், துத்தநாகம், காட்மியம், தாமிரம், வெள்ளி, மக்னீசியம் மற்றும் வெள்ளீயம்[2] போன்ற பொதுத் தனிமங்களின் உலோகக் கலவைகள் மீது பகுதியாக மெல்லிய அடுக்காகப் பூசப்பயன்படுகிறது. தொடர்புடைய குரோமேட்டு சேர்மப்பூச்சு இவ்வுலோகங்களுடன் வினைபுரிந்து அரிப்பைத் தடுக்கிறது, மின்கடத்தல் பண்பை தக்கவைக்கிறது மற்றும் உலோகக் கலவையின் இறுதியான தோற்றத்திற்கு ஒரு நிறைவைத் தருகிறது. இந்த செயல்முறை பொதுவாக வன்பொருட்கள் மற்றும் சிலகருவிப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.[3] இப்பூச்சு மேற்கொள்ளப்படும் போது குரோமேட்டு இனங்கள் அவற்றின் தனித்துவமான மஞ்சள் நிறத்தைப் பெற்றுக்கொள்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0087". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Buschow, K.H. Jürgen; Cahn, Robert W.; Flemings, Merton C.; Ilschner, Bernhard; Kramer, Edward J.; Mahajan, Subhash (Editors), Encyclopedia of Materials - Science and Technology (2001) p. 1265, Elsevier, Oxford, UK
  3. Frankel, Gerald S; Gerald s. Frankel, Robert Peter Frankenthal (2002). Corrosion Science: A Retrospective and Current Status in Honor of Robert P. Frankenthal. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781566773355. http://books.google.com/books?id=O1DcJk1JpCMC&pg=PA430.