இலித்தியம் முத்தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் முத்தெலூரைடு
இனங்காட்டிகள்
39327-86-1 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Li].[Te].[Te].[Te]
பண்புகள்
LiTe3
வாய்ப்பாட்டு எடை 389.74 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலித்தியம் முத்தெலூரைடு (Lithium tritelluride) என்பது LiTe3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் தெலூரியமும் சேர்ந்து இந்த இடைச்செருகல் சேர்மம் உருவாகிறது. Li-Te அமைப்பின் மூன்று அறியப்பட்ட உறுப்பினர்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை மூல உலோகங்களும் இலித்தியம் இருதெலூரைடும் (Li2te).

கண்டுபிடிப்பு[தொகு]

இலித்தியம் முத்தெலூரைடு முதன்முதலில் 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க அணுசக்தி ஆணையத்தின் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அணு உலையை குளிர்விக்க உருகிய தெலூரியம் உப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளால் இருப்பதால் இச்சேர்மம் பற்றிய ஆராய்ச்சி முதன்மையாக தொடங்கியது.[1][2]

தயாரிப்பு[தொகு]

பொருத்தமான விகிதவியல் அளவுகளில் இலித்தியம் மற்றும் தெலூரியத்தைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் இலித்தியம் முத்தெலூரைடை தயாரிக்க முடியும். இச்சேர்மம் 304 ° செல்சியசு வெப்பநிலைக்கு நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது; இந்த வெப்பநிலைக்கு கீழே விடப்பட்டால் சிதைந்து, தெலூரியம் ஆவியை வெளியிடுகிறது.[1][2]

கட்டமைப்பு[தொகு]

கட்டமைப்பு ரீதியாக, இலித்தியம் முத்தெலூரைடு தெலூரியத்திற்கு இணையான கிராபீன் போன்ற தளங்களால் ஆனதாகும். இந்த தளங்களில் உள்ள அணுக்கள் தெலூரியத்தின் "செங்குத்து" நெடுவரிசைகளை உருவாக்க சீரமைக்கப்படுகின்றன; இலித்தியம் அயனிகள் பின்னர் ஒவ்வொரு தெலூரியம் அறுகோணத்தின் மையத்திலும் ஓடும் நெடுவரிசைகளை உருவாக்குகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hitch, B. F.; Toth, L. M.; Brynestad, J. (1978). "The Decomposition Equilibrium of LiTe3". J. Inorg. Nucl. Chem. (Great Britain: Pergamon Press) 40: 31–34. doi:10.1016/0022-1902(78)80301-7. https://archive.org/details/sim_journal-of-inorganic-and-nuclear-chemistry_1978_40/page/31.  See also Cunningham, P. T.; Johnson, S. A.; Cairns, E. J. (March 1973). "Phase Equilibria in Chalcogen Systems III: Lithium-Tellurium". J. Electrochem. Soc. (The Electrochemical Society) 120: 328. doi:10.1149/1.2403448. https://iopscience.iop.org/article/10.1149/1.2403448/pdf. 
  2. 2.0 2.1 Sangster, J.; Pelton, A. D. (1992). "The Li-Te (Lithium-Tellurium) System". Journal of Phase Equilibria (Springer) 13 (3): 300–303. doi:10.1007/BF02667559. 
  3. Valentine, Diane Y.; Cavin, O. Burl; Yakel, Harry L. (1977). "On the Crystal Structure of LiTe3". Acta Crystallogr. (Wiley) B33 (5): 1389–1396. doi:10.1107/S0567740877006141.