தாண்டலம்(IV) அயோடைடு
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
14693-80-2 ![]() | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
TaI4 | |
வாய்ப்பாட்டு எடை | 688.57 |
தோற்றம் | கருப்பு நிற திண்மம்[1] |
உருகுநிலை | 398 °C (671 K) (சிதைவடையும்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாண்டலம்(IV) அயோடைடு (Tantalum(IV) iodide) என்பது TaI4 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரில் கரைந்து ஒரு பச்சை நிறக் கரைசலை கொடுக்கிறது, ஆனால் காற்றில் விடப்பட்டால் இதன் நிறம் மங்குகிறது. வெள்ளை நிறத்தில் வீழ்படிவாகிறது.[2]
தயாரிப்பு
[தொகு]தாண்டலம்(V) அயோடைடுடன் தாண்டலம் தனிமத்தைச் சேர்த்து குறைப்பு வினையின் மூலம் தாண்டலம்(IV) அயோடைடை தயாரிக்கலாம். ஒருவேளை பிரிடீனை குறைக்கும் முகவராகப் பயன்படுத்தினால் TaI4(py)2 என்ற கூட்டுசேர் பொருள் கிடைக்கும்.[3]
தாண்டலம்(V) அயோடைடுடன் அலுமினியம், மக்னீசியம் அல்லது கால்சியத்துடன் சேர்த்து 380 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தாலும் தாண்டலம்(IV) அயோடைடைத் தயாரிக்கலாம். உடன் Ta6I14 சேர்மமும் சேர்ந்து உருவாகிறது. எனவே மிகவும் தூய்மையான தாண்டலம்(IV) அயோடைடு படிகத்தை உற்பத்தி செய்வது கடினமாகிறது.[4]
- 3TaI5 + Al -> 3TaI4 + AlI3
பண்புகள்
[தொகு]தாண்டலம்(IV) அயோடைடு ஒரு கருப்பு நிறத் திடப்பொருளாகும். நையோபியம்(IV) அயோடைடை ஒத்த ஒரு படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[4] ஒற்றை-படிக தாண்டலம்(IV) அயோடைடு முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் இரஃபல் விக்லசு மற்றும் கெர்ட் மேயர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. Rb(Pr6C2)I12 என்ற வேதிப் பொருளை தயாரிக்கும்போது உருக்குக்கலனில் இது பெறப்பட்டது.[5] ஒற்றைப் படிகமானது ஓர் அலகு செல்லுக்கு இரண்டு வாய்பாட்டு அலகுகள் (a = 707.36 பைக்கோமீட்டர், b = 1064.64 பைக்கோமீட்டர், c = 1074.99 பைக்கோமீட்டர், α = 100.440°, β = 89 γ = 104.392°) என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் P1 ( எண். 2) என்ற இடக்குழுவுடன் முச்சரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. படிக அமைப்பு மற்ற இடை உலோக டெட்ரா அயோடைடுகளிலிருந்து வேறுபடுகிறது. இது பொதுவாக MI4/2I2/1 சங்கிலி அமைப்பைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது இருபடியை உருவாக்க ஒரு பொதுவான மேற்பரப்பில் இணைக்கப்பட்ட TaI6 எண்முகத்தைக் கொண்டுள்ளது. இது போன்ற இரண்டு இருபடிகள் ஒரு பொதுவான விளிம்பில் ஒரு நாற்படியை உருவாக்குகின்றன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Georg Brauer: Handbuch der präparativen anorganischen Chemie. 3., umgearb. Auflage. Band III. Enke, Stuttgart 1981, ISBN 3-432-87823-0, pp. 1455.
- ↑ Robert F. Rolsten (Jun 1958). "Preparation and X-ray Study of Some Tantalum Halides" (in en). Journal of the American Chemical Society 80 (12): 2952–2953. doi:10.1021/ja01545a011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01545a011. பார்த்த நாள்: 2021-03-24.
- ↑ R. E. McCarley, J. C. Boatman (Jun 1963). "The Preparation of Tantalum(IV) Bromide, Tantalum(IV) Iodide, and Pyridine Adducts of the Tantalum(IV) Halides" (in en). Inorganic Chemistry 2 (3): 547–551. doi:10.1021/ic50007a030. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50007a030. பார்த்த நாள்: 2021-03-24.
- ↑ 4.0 4.1 Handbuch der präparativen anorganischen Chemie. 3 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1981. ISBN 978-3-432-87823-2.
- ↑ Meyer, Gerd; Wiglusz, Rafal; Pantenburg, Ingo; Mudring, Anja-Verena (May 2008). "Tantalum(IV) Iodide, TaI4: A Molecular Solid Consisting of Dimers of Dimers, Ta4I16" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 634 (5): 825–828. doi:10.1002/zaac.200700529. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200700529.
- ↑ Habermehl, Katja (2010). Neue Untersuchungen an Halogeniden des Niobs und Tantals (text.thesis.doctoral thesis). Universität zu Köln.