டைகுளோரின் எக்சாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைகுளோரின் எக்சாக்சைடு
Space-filling model of the dichlorine hexoxide molecule
Space-filling model of the component ions of dichlorine hexoxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைகுளோரின் எக்சாக்சைடு Dichlorine hexoxide
வேறு பெயர்கள்
குளோரின் டிரையாக்சைடு; குளொரைல் பெர்குளோரேட்டு; குளோரின்(V,VII) ஆக்சைடு.
இனங்காட்டிகள்
12442-63-6 Y
ChemSpider 9564507 incorrect charge
InChI
 • InChI=1S/Cl2O6/c3-1(4)8-2(5,6)7
  Key: BMVIIZAOKBSWDS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129690529 incorrect diagram
SMILES
 • O=[Cl](=O)O[Cl](=O)(=O)=O
பண்புகள்
Cl2O6
வாய்ப்பாட்டு எடை 166.901 கி/மோல்
தோற்றம் சிவந்த நீர்மம்
அடர்த்தி 1.65 கி/செ.மீ3
உருகுநிலை 3.5 °C (38.3 °F; 276.6 K)
கொதிநிலை 200 °C (392 °F; 473 K)
வினை
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

டைகுளோரின் எக்சாக்சைடு (Dichlorine hexoxide) என்பது Cl2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். வாயு நிலையில் இவ்வாய்ப்பாடு சரியானதாகும். எனினும் நீர்ம அல்லது திண்ம நிலையில் இக்குளோரின் ஆக்சைடு அடர் சிவப்பு அயனிச்சேர்மம் குளோரைல் பெர்குளோரேட்டு [ClO2]+[ClO4]− அயனியாக அயனியாக்கம் அடைகிறது. குளோரிக் மற்றும் பெர்குளோரிக் அமிலங்களின் கலப்பு நீரிலியாக இது கருதப்படுகிறது.

குளோரின் டையாக்சைடு மற்றும் மிகையளவு ஓசோன் இரண்டும் வினைபுரிவதால் டைகுளோரின் எக்சாக்சைடு உற்பத்தியாகிறது.

2 ClO2 + 2 O3 → 2 ClO3 + 2 O2 → Cl2O6 + 2 O2

மூலக்கூற்று கட்டமைப்பு[தொகு]

வாயு நிலையில் அசலாக ஒரும குளோரின் டிரையாக்சைடு (ClO3) கட்டமைப்பில் டைகுளோரின் எக்சாக்சைடு இருப்பதாக விவரிக்கப்பட்டது [1]. ஆனால் ஆவியாதலுக்குப் பின் குளோரின் பெர்குளோரேட்டு (Cl2O4) மற்றும் ஆக்சிசனாக சிதைவடையும் வரை அது ஆக்சிசன்-பால இருபடியாக எஞ்சியிருப்பது பின்னர் காட்டப்பட்டது [2].ClO3 சேர்மம் பின்னர் மீள்கண்டுபிடிப்பு செய்யப்படுகிறது[3].

அறைவெப்பநிலையில் அடர்சிவப்பு நிற புகையும் நீர்மமாகக் காணப்படும் டைகுளோரின் எக்சாக்சைடு குளோரைல் பெர்குளோரேட்டு [ClO2]+[ClO4]− என்ற சிவப்பு நிற குளோரைல் பெர்குளோரேட்டாக அயனியாக்கம் அடைகிறது. சிவப்பு நிறம் குளோரைல் அயனிகளின் இருப்புக்கு ஓர் அடையாளம் ஆகும். எனவே இந்தச் சேர்மத்தில் குளோரினின் முறையான ஆக்சிசனேற்ற நிலை குளோரின்(V) மற்றும் குளோரின் (VII) ஆகியவற்றின் கலவையாக வாயு மற்றும் உறைந்த நிலைகளில் உள்ளது; இருப்பினும் ஒரு ஆக்சன்-குளோரின் பிணைப்பை உடைப்பதன் மூலம் சிறிதளவு எலக்ட்ரான் அடர்த்தி குளோரின்(VII) அயனியை நோக்கி மாறுகிறது.

பண்புகள்[தொகு]

டயா காந்தப்பண்பு கொண்ட Cl2O6 சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்ற முகவராகும். அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்ற போதிலும் கரிமச் சேர்மங்களுடன் பட நேர்ந்தால் இது தீவிரமாக வெடிக்கிறது[4]. தங்கத்துடனும் வினையில் ஈடுபட்டு [ClO2]+[Au(ClO4)4]−. என்ற குளோரைல் உப்பைக் கொடுக்கிறது[5]. Cl2O6 பங்குகொள்ளும் கீழ்கண்ட இதர வினைகள்யாவும் [ClO2]+[ClO4]− என்ற கட்டமைப்பை பிரதிபலிக்கின்றன:[6]

NO2F + Cl2O6 → NO2ClO4 + ClO2F
NO + Cl2O6 → NOClO4 + ClO2
2 V2O5 + 12 Cl2O6 → 4 VO(ClO4)3 + 12 ClO2 + 3 O2
SnCl4 + 6 Cl2O6 → [ClO2]2[Sn(ClO4)6] + 4 ClO2 + 2 Cl2
2Au + 6Cl2O6 → 2[ClO
2
]+
[Au(ClO
4
)
4
]
+ Cl2.

என்றாலும்கூட இது ClO3 இயங்குறுப்புக்குரிய ஓர் ஆதார மூலமாக வினைப்படுகிறது.

2 AsF5 + Cl2O6 → 2 ClO3AsF5

மேற்கோள்கள்[தொகு]

 1. C. F. Goodeve, F. A. Todd (1933). "Chlorine Hexoxide and Chlorine Trioxide". Nature 132 (3335): 514–515. doi:10.1038/132514b0. 
 2. Lopez, Maria; Juan E. Sicre (1990). "Physicochemical properties of chlorine oxides. 1. Composition, ultraviolet spectrum, and kinetics of the thermolysis of gaseous dichlorine hexoxide". J. Phys. Chem. 94 (9): 3860–3863. doi:10.1021/j100372a094. 
 3. Grothe, Hinrich; Willner, Helge (1994). "Chlorine Trioxide: Spectroscopic Properties, Molecular Structure, and Photochemical Behavior". Angew. Chem. Int. Ed. 33 (14): 1482–1484. doi:10.1002/anie.199414821. 
 4. Mary Eagleson (1994). Concise encyclopedia chemistry. Walter de Gruyter. பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-011451-8. https://books.google.com/books?id=Owuv-c9L_IMC. 
 5. Cunin, Frédérique; Catherine Deudon; Frédéric Favier; Bernard Mula; Jean Louis Pascal (2002). "First anhydrous gold perchlorato complex: ClO
  2
  Au(ClO
  4
  )
  4
  . Synthesis and molecular and crystal structure analysis". Inorganic Chemistry 41 (16): 4173–4178. doi:10.1021/ic020161z. பப்மெட்:12160405.
   
 6. Harry Julius Emeléus, Alan George Sharpe (1963). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-023605-2. https://books.google.com/books?id=pRXIwIV-hB8C. 


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகுளோரின்_எக்சாக்சைடு&oldid=2803040" இலிருந்து மீள்விக்கப்பட்டது