தங்கம்(III) ஆக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தங்கம்(III) ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
தங்கம் மூவாக்சைடு, தங்கம் செசுகியுவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1303-58-8 | |
பப்கெம் | 164805 |
பண்புகள் | |
Au2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 441.93 |
தோற்றம் | செம்பழுப்பு நிறத் திண்மம் |
அடர்த்தி | 11.34 கி/செ.மீ3 at 20 °C[1] |
உருகுநிலை | 160 °C (320 °F; 433 K) (சிதைவடையும்) |
நீரில் கரையாது, ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக அமிலம் ஆகியனவற்றில் கரையும். | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், oF40 |
புறவெளித் தொகுதி | Fdd2, No. 43[1] |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்கம்(III) ஆக்சைடு (Gold(III) oxide) என்ற தங்கத்தின் ஆக்சைடு சேர்மம் Au2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் உள்ள இத்திண்மம் நிலைப்புத் தன்மை இல்லாமல், 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் [2] சிதைவடைகிறது. நீரேற்று வடிவ தங்கம்(III) ஆக்சைடு குறைவான அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது. மற்றும் இச்சேர்மம் அடர் காரங்களில் கரைந்து உப்புகளைத் தருகிறது. இவ்வுப்புகளில் Au(OH)4− ion.[2]அயனிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
படிக உருவமற்ற நீரேறிய தங்கம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலம் மற்றும் உலோக பெர்குளோரேட்டு ஆகியவற்றை ஒரு குவார்ட்சு குழாயில் இட்டு சுமார் 250 பாகை செல்சியசு வெப்பநிலை மற்றும் 30 மெகா பாஸ்கல் அழுத்தத்தில் சூடுபடுத்தினால் நீரிலி வடிவ தங்கம்(III) ஆக்சைடு தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jones, P. G.; Rumpel, H.; Schwarzmann, E.; Sheldrick, G. M.; Paulus, H. (1979). "Gold(III) oxide". Acta Crystallographica Section B 35 (6): 1435. doi:10.1107/S0567740879006622.
- ↑ 2.0 2.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.