உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கம்(III) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம்(III) அசிட்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஆரிக் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
15804-32-7
InChI
  • InChI=1S/3C2H4O2.Au/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15952561
  • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[Au+3]
பண்புகள்
Au(CH3COO)3
வாய்ப்பாட்டு எடை 374.10 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற திண்மம்
உருகுநிலை 170 °C (338 °F; 443 K)[2] (decomposes)
0.004 கி/லிட்டர்
கரைதிறன் காரக் கரைசல்களில் சிறிதளவு கரையும்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தங்கம்(III) அசிட்டேட்டு (Gold(III) acetate) Au(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். தங்கமும் அசிட்டிக் அமிலமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஆரிக் அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மஞ்சள் நிறங்கொண்ட திடப்பொருளாகும். 170 ° செல்சியசு வெப்பநிலையில் இது தங்கம் உலோகமாக சிதைகிறது. தங்கம்(III) அசிடேட்டின் இந்த சிதைவு, தங்கம் நானோ துகள்களை வினையூக்கிகளாக உருவாக்குவதற்கான பாதையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[3]

தயாரிப்பு[தொகு]

தங்கம்(III) ஐதராக்சைடுடன் பனிநிலை அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தங்கம்(III) அசிட்டேட்டு உருவாகிறது.:[4]

Au(OH)3 + 3CH3COOH → Au(CH3COO)3 + 3H2O

வினைகள்[தொகு]

இருவளைய கரிமச் சேர்மத்திலுள்ள வளைய எண்கந்தகத்துடன் தங்கம்(III) அசிட்டேட்டு வினைபுரிந்தால் தங்கம்(III) சல்பைடு உருவாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hiroaki Sakurai; Kenji Koga; Yasuo Iizuka; Masato Kiuchi (2013). "Colorless alkaline solution of chloride-free gold acetate for impregnation: An innovative method for preparing highly active Au nanoparticles catalyst" (in en). Applied Catalysis A: General 462: 236-246. doi:10.1016/j.apcata.2013.05.016. 
  2. S. Bakrania; G. Rathore; Margaret Wooldridge (2008). "An investigation of the thermal decomposition of gold acetate" (in en). Journal of Thermal Analysis and Calorimetry 95 (1): 117–122. doi:10.1007/s10973-008-9173-1. 
  3. H.-S. Oh; J.H. Yang; C.K. Costello; Y.M. Wang; S.R. Bare; H.H. Kung; M.C. Kung (2002). "Selective Catalytic Oxidation of CO: Effect of Chloride on Supported Au Catalysts" (in en). Journal of Catalysis 210 (2): 375-386. doi:10.1006/jcat.2002.3710. 
  4. "Method of producing a gold film" (in en). Official Gazette of the United States Patent and Trademark Office (Pennsylvania State University: U.S. Department of Commerce, Patent and Trademark Office) 1115 (2): 1048. 1990. https://www.google.com/books/edition/Official_Gazette_of_the_United_States_Pa/vUsFYVUAtcwC?hl=en&gbpv=0. பார்த்த நாள்: 5 May 2023. 
  5. Kristl, M.; Drofenik, M. (2003). "Preparation of Au2S3 and nanocrystalline gold by sonochemical method". Inorganic Chemistry Communications 6 (12): 1419–1422. doi:10.1016/j.inoche.2003.08.027. https://reader.elsevier.com/reader/sd/pii/S138770030300296X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(III)_அசிட்டேட்டு&oldid=3707589" இலிருந்து மீள்விக்கப்பட்டது