குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I)
இனங்காட்டிகள் | |
---|---|
29892-37-3 | |
ChemSpider | 4809153 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image
separate form |
பப்கெம் | 6100873 |
| |
பண்புகள் | |
C2H6AuClS | |
வாய்ப்பாட்டு எடை | 294.55 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) (Chloro(dimethyl sulfide)gold(I)) என்பது C2H6AuClS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தங்கத்தின் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தங்கத்தின் வேதியியலில் பிரவேசிப்பதற்கான நுழைவுப் புள்ளியாகக் கருதப்படுகிறது.
கட்டமைப்பு
[தொகு]மற்ற தங்கம்(I) அணைவுச் சேர்மங்களைப் போலவே குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) சேர்மமும் மையத்தில் இடம்பெற்றுள்ள தங்க அணுவின் நோக்கில் கிட்டத்தட்ட நேர்கோட்டு வடிவ கட்டமைப்பை (176.9°) ஏற்கிறது. தங்கம்-கந்தகம் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பு நீளம் மற்ற தங்கம்(I) அணைவுச் சேர்மங்களின் தங்கம்-கந்தகம் அணுக்களுக்கிடையேயான பிணைப்பைப் போலவே 2.271(2) Å என்ற நீளத்தைக் கொண்டுள்ளது. [1]
தயாரிப்பு
[தொகு]தங்கத்தை இராச திராவகத்தில் கரைத்து முதலில் குளோரோ ஆரிக் அமிலம் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. இதைத் தொடர்ந்து இருமெத்தில் சல்பைடு சேர்த்து குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) அணைவுச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது. [2] சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டை தங்கம்(III) அயனியின் மூலமாகப் பயன்படுத்தியும் குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) தயாரிக்க முடியும். [3] இதே வழிமுறையில் புரோமோ ஒப்புமைச் சேர்மமும் (Me2SAuBr) தயாரிக்கப்படுகிறது. [4]
- HAuCl4 + 2 SMe2 + H2O → Me2SAuCl + 3 HCl + OSMe2
என்ற வேதிச்சமன்பாடு இவ்வினைக்கான தோராயமான சமன்பாடாகும். 1:2 என்ற விகிதத்திலுள்ள இருமெத்தில் சல்பாக்சைடு / அடர் நைட்ரிக் அமிலக் கரைசலில் உள்ள தனிமநிலை தங்கத்தைப் பயன்படுத்தி எளிமையான முறையில் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். இவ்வினையில் இருமெத்தில் சல்பாக்சைடு ஓர் ஆக்சிசனேற்றியாகவும் வினையில் உருவாகும் Me2S ஓர் ஈந்தணைவியாகவும் செயல்படுகின்றன.[5]
வினைகள்
[தொகு]குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) அணைவுச் சேர்மத்திலுள்ள இருமெத்தில் சல்பைடு ஈந்தணைவியை பிற ஈந்தணைவிகள் எளிமையாக இடப்பெயர்ச்சி செய்கின்றன.
- Me2SAuCl + L → LAuCl + Me2S (L = ஈந்தணைவி)
இருமெத்தில் சல்பைடு எளிதில் ஆவியாகும் என்பதால் இதை ஆவியாக்கி புதியதாக உருவாகும் தங்க அணைவுச் சேர்மத்தை எளிதில் தூய்மைப் படுத்தலாம்.
ஒளி, வெப்பம், காற்று போன்றவற்றில் குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) வெளிப்பட நேர்ந்தால் தனிமநிலை தங்கமாக சிதைவடையும். எனவே -20 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் கருப்பு நிற கண்ணாடி கொள்கலனில் இந்த அணைவுச் சேர்மத்தைச் சேமிப்பது பாதுகாப்பானதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. G. Jones and J. Lautner (1988). "Chloro(dimethyl sulfide)gold(I)". Acta Crystallogr. C 44 (12): 2089–2091. doi:10.1107/S0108270188009151.
- ↑ Marie-Claude Brandys , Michael C. Jennings and Richard J. Puddephatt (2000). "Luminescent gold(I) macrocycles with diphosphine and 4,4-bipyridyl ligands". J. Chem. Soc., Dalton Trans. (24): 4601–4606. doi:10.1039/b005251p.
- ↑ Nishina, Naoko; Yamamoto, Yoshinori (2007). "Gold-Catalyzed Intermolecular Hydroamination of Allenes: First Example of the Use of an Aliphatic Amine in Hydroamination". Synlett 2007 (11): 1767. doi:10.1055/s-2007-984501.
- ↑ Hickey, James L.; Ruhayel, Rasha A.; Barnard, Peter J.; Baker, Murray V.; Berners-Price, Susan J.; Filipovska, Aleksandra (2008). "Mitochondria-Targeted Chemotherapeutics: The Rational Design of Gold(I)N-Heterocyclic Carbene Complexes That Are Selectively Toxic to Cancer Cells and Target Protein Selenols in Preference to Thiols". J. Am. Chem. Soc. 130 (38): 12570–1. doi:10.1021/ja804027j. பப்மெட்:18729360.
- ↑ Mueller, Thomas E.; Green, Jennifer C.; Mingos, D. Michael P.; McPartlin, Jennifer C.; Whittingham, Conrad; Williams, David J.; Woodroffe, Thomas M. (1998). "Complexes of gold(I) and platinum(II) with polyaromatic phosphine ligands". J. Organomet. Chem. 551 (1-2): 313. doi:10.1016/S0022-328X(97)00522-6.