தங்கம்(III) பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம்(III) பாசுபேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஆரிக் பாசுப்பேட்டு
இனங்காட்டிகள்
1204296-55-8  Y
InChI
  • InChI=1S/Au.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25254913
SMILES
  • [O-]P(=O)([O-])[O-].[Au+3]
பண்புகள்
AuPO4
வாய்ப்பாட்டு எடை 291.94 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 5.74 கி/செ.மீ3
உருகுநிலை 450 °C (842 °F; 723 K) (சிதையும்)
கரையாது
கரைதிறன் அசிட்டோனில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சாய்வு
ஒருங்கிணைவு
வடிவியல்
4 (Au)
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-169.8 கியூ/மோல் (முன்கணிப்பு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தங்கம்(III) பாசுபேட்டு (Gold(III) phosphate) AuPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இது காணப்படுகிறது, நீரிலும் அசிட்டோனிலும் கரையாது. 450 ° செல்சியசு வெப்பநிலையில் தங்கம் உலோகமாகவும் ஆக்சிசன் மற்றும் பாசுபரசு பெண்டாக்சைடாகவும் இது சிதைவடையும்.[1]

தயாரிப்பு[தொகு]

தங்கம்(III) ஐதராக்சைடுடன் பாசுபாரிக் அமிலத்தைச் சேர்த்து 130 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் தங்கம்(III) பாசுப்பேட்டு உருவாகும்:[1]

AuO(OH) + H3PO4 → AuPO4 + 2H2O

பாசுபாரிக் அமிலத்திற்குப் பதிலாக நைத்திரிக் அமிலமும் பாசுபாரசு பெண்டாக்சைடும் சேர்ந்த கலவையைப் பயன்படுத்தியும் தயாரிக்க இயலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pd2P2O7 AND AuPO4 - NEW ANHYDROUS PHOSPHATES OF NOBLE METALS" (in en). Phosphorus Research Bulletin (Japanese Association of Inorganic Phosphorus Chemistry) 19: 77-82. 2005. doi:10.3363/prb1992.19.0_77. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(III)_பாசுபேட்டு&oldid=3707609" இலிருந்து மீள்விக்கப்பட்டது