குளோரின் பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரின் பெர்குளோரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரிம் பெர்குளோரேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரோ ஒஎர்குளோரேட்டு[1]
வேறு பெயர்கள்
குளோரின்(I,VII)ஆக்சைடு
இருகுளோரின்நான்காக்சைடு
இனங்காட்டிகள்
27218-16-2 Y
ChemSpider 147540 N
InChI
  • InChI=1S/Cl2O4/c1-6-2(3,4)5 N
    Key: JRONPIZRZBBOBR-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 168667
SMILES
  • ClO[Cl](=O)(=O)=O
பண்புகள்
Cl2O4
வாய்ப்பாட்டு எடை 134.90 g·mol−1
தோற்றம் வெளிர் பச்சை திரவம்
அடர்த்தி 1.81 கி செ.மீ−3
உருகுநிலை −117 °C (−179 °F; 156 K)
கொதிநிலை 20 °C (68 °F; 293 K) (சிதைவடையும்)
வினைபுரியும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

குளோரின் பெர்குளோரேட்டு (Chlorine perchlorate) என்பது Cl2O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மமாகும்]]. குளோரினின் இந்த ஆக்சைடு ஒரு சமச்சீரற்ற ஆக்சைடு ஆகும். ஏனெனில் இதிலுள்ள குளோரின் அணுக்களில் ஒன்று +1 ஆக்சிசனேற்ற நிலையிலும் மற்றோரு குளோரின் அணு +7 ஆக்சிசனேற்ற நிலையிலும் உள்ளன. இதனுடைய சரியான மூலக்கூறை எழுத வேண்டுமெனில் ClOClO3. என்று எழுதலாம்.அறை வெப்பநிலையில் குளோரின் ஈராக்சைடு| ஈராக்சைடை 436 நா.மீ புறஊதா ஒளியில் ஒளிச்சிதைவுக்கு உட்படுத்தினால் குளோரின் பெர்குளோரேட்டு உண்டாகிறது:[2][3]

2 ClO2 → ClOClO3

−45 °செ வெப்பநிலையில் பின்வரும் முறையிலும் பெர்குளோரேட்டைத் தயாரிக்க முடியும்.

CsClO4 + ClOSO2F → Cs(SO3)F + ClOClO3

வெளிர் பச்சைநிறத் திரவமான குளோரின் பெர்குளோரேட்டு அறை வெப்பநிலையில் சிதைவடைகிறது.

பண்புகள்[தொகு]

குளோரின் ஈராக்சைடைக் காட்டிலும் இது நிலைப்புத் தன்மை மிக்கது ஆகும். மற்றுமிது அறைவெப்ப நிலையில் ஆக்சிசன், குளோரின் மற்றும் இருகுளோரின் அறுவாக்சைடுகளாகச் சிதைவடைகிறது.

2 ClOClO3O2 + Cl2 + Cl2O6

உலோக குளோரைடுகளுடன் குளோரின் பெர்குளோரேட்டு வினைபுரிந்து நீரற்ற பெர்குளோரேட்டுகளாக மாறுகிறது.

CrO2Cl2 + 2 ClOClO3 → 2 Cl2 + CrO2(ClO4)2
TiCl4 + 4 ClOClO3 → 4 Cl2 + Ti(ClO4)4

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chloro Perchlorate - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. A. J. Schell-Sorokin, D. S. Bethune, J. R. Lankard, M. M. T. Loy, P. P. Sorokin (1982). "Chlorine perchlorate a major photolysis product of chlorine dioxide". J. Phys. Chem. 86 (24): 4653–4655. doi:10.1021/j100221a001. 
  3. M. I. Lopez, J. E. Sicre (1988). "Ultraviolet spectrum of chlorine perchlorate". J. Phys. Chem. 92 (2): 563–564. doi:10.1021/j100313a062.