யூரோப்பியம்(III) ஆக்சைடு
இனங்காட்டிகள் | |
---|---|
1308-96-9 | |
ChemSpider | 3441840 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159371 |
| |
பண்புகள் | |
Eu2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 351.926 கி/மோல் |
தோற்றம் | வெண் பொடி |
அடர்த்தி | 7.40 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,350 °C (4,260 °F; 2,620 K) |
மிகமிகக் குறைவு | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, கனசதுரம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோபியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(III) ஆக்சைடு, கடோலினியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோபியம்(III) ஆக்சைடு (Europium(III) oxide) என்பது Eu2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோபியம் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சிவப்பு அல்லது நீலம் வண்ண ஒளிர்பொருளாக தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் உடனொளிர்வு விளக்குகளில் பயன்படுகிறது. மேலும், இட்ரியம் அடிப்படையிலான ஒளிர்பொருட்களுக்கு செயலூக்கியாக்கவும், உடனொளிர்வு கண்ணாடிகள் தயாரிப்பில் ஒரு முகவராகவும் யூரோபியம்(III) ஆக்சைடு பெரிதும் பயன்படுகிறது. ஐரோ பணத்தில் போலித் தாள்களை கண்டறியும் ஒளிர்பொருளாகவும் யூரோபியம் உடனொளிர்தல் பொருட்கள் பயன்படுகின்றன[1].
யூரோபியம் ஆக்சைடு இரண்டு பொதுவான படிக அமைப்புகளில் காணப்படுகிறது. 1. ஒற்றைச்சரிவுப் படிகம் (mS30, இடக்குழு = C2/m, எண். 12) மற்றும் 2. கனசதுரம் (cI80, இடக்குழு = Ia-3, எண். 206). கனசதுர அமைப்பானது மாங்கனீசு (III) ஆக்சைடின் படிகவமைப்பை ஒத்திருக்கிறது. உலோக யூரோபியத்தை எரியூட்டுவதன் முலமாக யூரோபியம்(III) ஆக்சைடு தயாரிக்கலாம்.
அமிலங்களுடன் வினைபுரிந்து அவ்வமிலங்களுடன் தொடர்புடைய யூரோபியம் உப்புகளை யூரோபியம்(III) ஆக்சைடு உருவாக்குகிறது.
படக்காட்சியகம்
[தொகு]-
கனசதுர Eu2O3
-
ஒற்றைச்சரிவு Eu2O3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Europium and the Euro". Archived from the original on 2009-08-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.