யூரோப்பியம் இருகுளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
யூரோப்பியம்(II) குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13769-20-5 உலர் நிலை 70442-98-7 இருநீரேற்று | |
ChemSpider | 75541 |
EC number | 237-386-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83719 |
| |
பண்புகள் | |
Cl2Eu | |
வாய்ப்பாட்டு எடை | 222.86 g·mol−1 |
தோற்றம் | வெண்மை நிற திண்மம் |
அடர்த்தி | 4.86 கி·செ.மீ−3[1] |
உருகுநிலை | 738 °C (1,011 K)[2] |
கொதிநிலை | 2,190 °C (2,460 K)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம் இருபுளோரைடு யூரோப்பியம் இருபுரோமைடு யூரோப்பியம் ஈரயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(II) குளோரைடு தூலியம்(II) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம் இருகுளோரைடு (Europium dichloride) என்பது EuCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புற ஊதா ஒளியால் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படும்போது யூரோப்பியம் இருகுளோரைடு பிரகாசமான நீல நிற உடனொளிர்வைக் கொண்டுள்ளது. யூரோப்பியம் டைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு முறை
[தொகு]யூரோப்பியம் முக்குளோரைடை உயர் வெப்பநிலையில் ஐதரசன் வாயுவுடன் சேர்க்கும் போது ஒடுக்க வினை நிகழ்ந்து யூரோப்பியம் இருகுளோரைடு உருவாகிறது.[3]
- 2 EuCl3 + H2 → 2 EuCl2 + 2 HCl
உலர் யூரோப்பியம் முக்குளோரைடுடன் டெட்ரா ஐதரோபியூரானில் கரைந்த இலித்தியம் போரோ ஐதரைடை சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம் இருகுளோரைடு கிடைக்கிறது.:[4]
- 2 EuCl3 + 2 LiBH4 → 2 EuCl2 + 2 LiCl + H2↑ + B2H6↑
EuCl2•8NH3 போன்ற மஞ்சள் நிற அமோனியா ஒருங்கிணைவுச் சேர்மங்களை யூரோப்பியம் இருகுளோரைடு உருவாக்குகிறது. கரைசலாக்கப்படும்போது இது வெளிர் மஞ்சள் நிற EuCl2•NH3 கரைசலாக மாறுகிறது.[3] யூரோப்பியம் ஐதரைடுடன் யூரோப்பியம் இருகுளோரைடு 120 பார் ஐதரசன் வாயு அழுத்தச்சூழலில் பச்சை நிற உடனொளிர்வைக் கொடுக்கும் EuClH சேர்மம் கிடைக்கிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roger Blachnik (Hrsg.): Taschenbuch für Chemiker und Physiker. Band III: Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale. begründet von Jean d’Ans, Ellen Lax. 4., neubearbeitete und revidierte Auflage. Springer, Berlin 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-60035-3, S. 446–447
- ↑ 2.0 2.1 Polyachenok, O. G.; Novikov, G. I. Saturated vapor pressures of SmCl2, EuCl2, YbCl2. Zhurnal Neorganicheskoi Khimii, 1963. 8 (12): 2631–2634. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
- ↑ 3.0 3.1 Klemm, Wilhelm; Doll, Walter. Measurements on the bivalent and the quadrivalent compounds of the rare earths. VI. The halides of bivalent europium. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1939. 241: 233–238. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-2313.
- ↑ Rossmanith, K.; Muckenhuber, E. Reaction of rare earth chlorides with lithium borohydride. II. Monatshefte fuer Chemie, 1961. 92: 600–604. பன்னாட்டுத் தர தொடர் எண் 0026-9247.
- ↑ Kunkel, Nathalie; Rudolph, Daniel; Meijerink, Andries; Rommel, Stefan; Weihrich, Richard; Kohlmann, Holger; Schleid, Thomas (2015). "Green Luminescence of Divalent Europium in the Hydride Chloride EuHCl". Zeitschrift für anorganische und allgemeine Chemie 641 (7): 1220–1224. doi:10.1002/zaac.201400531. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313.