யூரோப்பியம்(III) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(III) அயோடைடு
| |
வேறு பெயர்கள்
யூரோப்பியம் மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13759-90-5 | |
ChemSpider | 23349674 |
EC number | 244-721-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
EuI 3 | |
வாய்ப்பாட்டு எடை | 532.677 கி மோல்−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள்[2] |
உருகுநிலை | சிதையும் [1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | BiI3 |
ஒருங்கிணைவு வடிவியல் |
octahedral |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | EuF3, EuCl3, EuBr3 |
ஏனைய நேர் மின்அயனிகள் | SmI3, GdI3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(III) அயோடைடு (Europium(III) iodide) என்ற கனிம வேதியியல் சேர்மம் EuI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. யூரோப்பியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]யூரோப்பியம் உலோகம் நேரடியாக அயோடினுடன் வினையில் ஈடுபட்டு யூரோப்பியம்(III) அயோடைடு உண்டாகிறது. [3]
- 2 Eu + 3 I2 → 2 EuI3
யூரோப்பியம்(III) ஆக்சைடு அல்லது யூரோப்பியம்(III) கார்பனேட்டை ஐதரயோடிக் அமிலத்தில் கரைத்து யூரோப்பியம்(III) அயோடைடின் நீரேற்று வடிவத்தைப் பெறலாம்.:[1][4]
- Eu2O3 + 6 HI + 6 H2O → 2 EuI3·9H2O
யூரோபியத் தூள் டெட்ரா ஐதரோ பியூரானில் உள்ள அயோடினுடன் வினைபுரிந்து யூரோபியம்(III) அயோடைடின் டெட்ரா ஐதரோ பியூரான் கூட்டுவிளைபொருளைக் கொடுக்கிறது:[5][6]
- 2 Eu + 3 I2 + 7 THF → [EuI2(THF)5][EuI4(THF)2]
இக்கூட்டு விளைபொருளை இன்னும் எளிமையாக EuI3(THF)3.5 என எழுதலாம்.
கட்டமைப்பு
[தொகு]பிசுமத்(III) அயோடைடின் கட்டமைப்பில் உள்ளது போல [1][7][8] ஒவ்வொரு Eu3+ அயனியும் 6 அயோடைடு அயனிகளுடன் எண்முக ஒருங்கிணைப்பு கொண்டிருக்கும் கட்டமைப்பை யூரோப்பியம்(III) அயோடைடு ஏற்றுக்கொள்கிறது[1].
வினைகள்
[தொகு]யூரோபியம்(II) அயோடைடை தயாரிப்பதற்கான இரண்டு முக்கிய வினைகளுக்கு யூரோபியம்(III) அயோடைடு ஒரு தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது:[9]
ஐதரசன் வாயுவுடன் சேர்த்து 350 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் EuI2 கிடைக்கிறது:
- 2 EuI3 + H2 → 2 EuI2 + 2 HI
200 பாகை செல்சியசு வெப்பநிலையில் விகிதாச்சாரமற்ற வெப்பச்சிதைவுக்கு உட்படுகிறது.[1]:
- 2 EuI3 → 2 EuI2 + 2 I2
நீரேற்றான யூரோப்பியம் நோனா ஐதரேட்டு (EuI3·9H2O) வெப்பச்சிதைவுக்கு உட்பட்டு யூரோப்பியம்(II) அயோடைடு இர்ருநீரேற்றாக மாற்றமடைகிறது. [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1240–1241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ William M. Haynes, ed. (2014). CRC Handbook of Chemistry and Physics (95th ed.). CRC Press. p. 4-63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1482208689.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ Emel'yanov, V. I.; Kuznetsova, L. I.; Abramova, L. V.; Ezhov, A. I. (1997). "Systems Eu2O3-HI-H2O and EuI3-HI-H2O at 25°C". Zh. Neorg. Khim. 42 (8): 1394–1396. https://core.ac.uk/display/289558963.
- ↑ Ortu, Fabrizio (2022). "Rare Earth Starting Materials and Methodologies for Synthetic Chemistry". Chem. Rev. 122: 6040–6116. doi:10.1021/acs.chemrev.1c00842.
- ↑ Gompa, Thaige P.; Rice, Natalie T.; Russo, Dominic R.; Aguirre Quintana, Luis M.; Yik, Brandon J.; Basca, John; La Pierre, Henry S. (2019). "Diethyl ether adducts of trivalent lanthanide iodides". Dalton Trans. 48: 8030–8033. doi:10.1039/C9DT00775J.
- ↑ Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
- ↑ Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (1964). "Preparation and Crystal Data for Lanthanide and Actinide Triiodides". Inorg. Chem. 3 (8): 1137–1141. doi:10.1021/ic50018a015. https://digital.library.unt.edu/ark:/67531/metadc867868/.
- ↑ Brauer, Georg (1975). Handbook of Preparative Inorganic Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.
- ↑ Jenden, Charles M.; Lyle, Samuel J. (1982). "A Mössbauer spectroscopic study of the lodides of europium". J. Chem. Soc., Dalton Trans. (12): 2409-2414. doi:10.1039/DT9820002409.