உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோப்பியம்(III) குரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) குரோமேட்டு
Europium(III) chromate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(III) குரோமேட்டு
வேறு பெயர்கள்
  • யூரோப்பியம் குரோமேட்டு
  • யூரோப்பியம்(3+) குரோமேட்டு
இனங்காட்டிகள்
60746-51-2
பண்புகள்
வாய்ப்பாட்டு எடை 267.96 கி/மோல்
அடர்த்தி 5.39 கி/செ.மீ−3[1][2]
உருகுநிலை 700 °செல்சியசு[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யூரோப்பியம்(III) குரோமேட்டு (Europium(III) chromate) என்பது EuCrO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியம், குரோமியம் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. யூரோப்பியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் குரோமியமும் மற்றும் -2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஆக்சிசனும் இச்சேர்மத்தில் இடம் பெற்றுள்ளன.[4][3]

தயாரிப்பு

[தொகு]

யூரோப்பியம்(III) அசிடேட்டு மற்றும் குரோமியம்(IV) ஆக்சைடு ஆகிய சேர்மங்களின் சமமோலார் கரைசலை வெற்றிடத்தில் 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலர்த்தி பின்னர் காற்றில் 400 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடேற்றினால் யூரோப்பியம்(III) குரோமேட்டைப் பெறலாம்.[2][5]

யூரோப்பியம்(III) நைட்ரேட்டு அறுநீரேற்று மற்றும் குரோமியம்(III) நைட்ரேட்டு ஒன்பது நீரேற்று ஆகியவற்றை விகிதாச்சார அளவுகளில் கலந்து 30 நிமிடங்களுக்கு 433 கெல்வின் வெப்பநிலையில் 30 நிமிடங்களும் 473 கெல்வின் வெப்பநிலையில் 30 நிமிடங்களும் 1 மணிநேரம் 853 கெல்வின் வெப்பநிலையிலும் வினைபுரியச் செய்யவேண்டும். ஆக்சிசன் வாயு வினை கலவையின் மீது தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு யூரோப்பியம்(III) குரோமேட்டைப் பெறுவது மற்றொரு தயாரிப்பு வழிமுறையாகும்.[4]

Eu(NO3)3•6H2O + Cr(NO3)•9H2O → EuCrO4 + 6 NO2 + 15H2O

பண்புகள்

[தொகு]

ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்ப்பாட்டு அலகுகள் என்ற அளவில் = a=722.134, c = 632.896 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன், I41/amd (எண். 141) என்ற இடக்குழுவில் நாற்கோண வடிவத்தை ஏற்றுக் கொண்டு யூரோப்பியம்(III) குரோமேட்டு படிகமாகிறது.[2] யூரோப்பியம்(III) குரோமேட்டின் நீல் வெப்பநிலை 15.9 கெல்வின் ஆகும். 700 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் யூரோப்பியம்(III) குரோமேட்டு யூரோப்பியம் குரோமைட்டாக (EuCrO3) சிதையத் தொடங்குகிறது.[3]

2EuCrO4 → 2 EuCrO3 + O2

மேற்கோள்கள்

[தொகு]
  1. G. Buisson, E. F. Bertaut, J. Mareschal (1964), "Etude cristallographique des composes TCrO4 (T = terre rare ou Y)", Comptes Rendus Hebdomadaires des Seances de l'Academie des Sciences (in German), vol. 259, pp. 411–413{{citation}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 Hidetaka Konno, Yoshitaka Aoki, Zoltán Klencsár, Attila Vértes, Makoto Wakeshima (2001-12-01). "Structure of EuCrO4 and Its Electronic and Magnetic Properties". Bulletin of the Chemical Society of Japan 74 (12): 2335–2341. doi:10.1246/bcsj.74.2335. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2673. https://www.journal.csj.jp/doi/10.1246/bcsj.74.2335. 
  3. 3.0 3.1 3.2 J. Thakur, R. Shukla, N. Raje, D. Ghonge, H. Bagla (2011-10-01). "Synthesis, Structural Characterization and Thermal Stability of Nanocrystalline Rare-Earth Chromates (RECrO4) and Rare-Earth Chromites (RECrO3)". Nanoscience and Nanotechnology Letters 3 (5): 648–654. doi:10.1166/nnl.2011.1233. https://www.ingentaconnect.com/content/asp/nnl/2011/00000003/00000005/art00008;jsessionid=1miu8i234ifxq.x-ic-live-01. 
  4. 4.0 4.1 E Jiménez, J Isasi, R Sáez-Puche (2000-11-01). "Synthesis, structural characterization and magnetic properties of RCrO4 oxides, R=Nd, Sm, Eu and Lu". Journal of Alloys and Compounds 312 (1–2): 53–59. doi:10.1016/S0925-8388(00)01079-3. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0925838800010793. 
  5. Yoshitaka Aoki, Hidetaka Konno, Hiroto Tachikawa, Michio Inagaki (2000-05-01). "Characterization of LaCrO4 and NdCrO4 by XRD, Raman Spectroscopy, and ab Initio Molecular Orbital Calculations". Bulletin of the Chemical Society of Japan 73 (5): 1197–1203. doi:10.1246/bcsj.73.1197. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2673. https://www.journal.csj.jp/doi/10.1246/bcsj.73.1197.