யூரோப்பியம்(III) பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்யூரோப்பியம், யூரோப்பியம் பாசுபைடு[1]
இனங்காட்டிகள்
120069
ChemSpider 107191
EC number 249-274-5
InChI
  • InChI=1S/Eu.P
    Key: UXXSRDYSXZIJEN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 120069
SMILES
  • P#[Eu]
பண்புகள்
EuP
வாய்ப்பாட்டு எடை 182.94
தோற்றம் அடர் நிற படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 2,200 °C (3,990 °F; 2,470 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யூரோப்பியம்(III) பாசுபைடு (Europium(III) phosphide) என்பது EuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3][4] யூரோப்பியத்தின் இதர பாசுபைடுகளும் அறியப்படுகின்றன.[5]

தயாரிப்பு[தொகு]

தூளாக்கப்பட்ட யூரோப்பியத்துடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து வெற்ரிடம் அல்லது மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தினால் யூரோப்பியம்(III) பாசுபைடு தோன்றுகிறது.

Eu + P → EuP

நீர்ம அமோனியாவில் கரைந்த யூரோப்பியத்தின் வழியாக பாசுபீனை செலுத்தினாலும் யூரோப்பியம்(III) பாசுபைடு கிடைக்கும்.:[6]

Eu + 2PH3 → Eu(PH2)2 + H2

பாசுபீனைட்டை சூடுபடுத்தி தேவையான அளவுக்கு சிதைவுக்கு உட்படுத்தினால் யூரோப்பியம்(III) பாசுபைடு உருவாகிறது.

2Eu(PH2)2 → 2EuP + 2PH3 + H2</sub

இயற்பியற் பண்புகள்[தொகு]

யூரோப்பியம்(III) பாசுபைடு அடர் நிறத்தில் Fm3m என்ற இடக்குழுவுடன் கனசதுரப் படிகங்களாக உருவாகிறது. காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் தண்ணீரில் கரையாத உப்பாகவும் உள்ளது.

பயன்கள்[தொகு]

உயர் அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் உயர் சக்தி பயன்பாடுகள் மற்றும் சிரொளி இருமுனையங்களில் ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Europium phosphide". European Chemical Agency. https://echa.europa.eu/substance-information/-/substanceinfo/100.044.780. 
  2. 2.0 2.1 "Europium Phosphide" (in en). American Elements. https://www.americanelements.com/europium-phosphide-28866-07-1. 
  3. Pankratz, L. B. (1995). Bulletin 696. U.S. Government Printing Office. பக். 279. https://www.google.ru/books/edition/Bulletin/8hg4ic7fA7AC?hl=en&gbpv=1. 
  4. (in en) Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices. United States Environmental Protection Agency. 1980. பக். 172. https://www.google.ru/books/edition/Toxic_Substances_Control_Act_TSCA_Chemic/fkkJPwbY93gC?hl=en&gbpv=1&dq=Europium+phosphide+EuP&pg=RA3-PA145&printsec=frontcover. பார்த்த நாள்: 15 December 2021. 
  5. Mironov, K.E.; Brygalina, G.P.; Vikorskii, V. N. (1974). "Magnetism of Europium phosphides" (in en). Proceedings of the Rare Earth Research Conference. Plenum Press. பக். 105. https://www.google.ru/books/edition/Proceedings_of_the_Rare_Earth_Research_C/yKAaAQAAMAAJ?hl=en&gbpv=1&bsq=Europium(III)+phosphide+EuP&dq=Europium(III)+phosphide+EuP&printsec=frontcover. பார்த்த நாள்: 15 December 2021. 
  6. Pytlewski, L. L.; Howell, J. K. (1 January 1967). "Preparation of Europium and ytterbium phosphides in liquid ammonia" (in en). Chemical Communications (London) (24): 1280. doi:10.1039/C19670001280. https://pubs.rsc.org/en/content/articlelanding/1967/C1/c19670001280. பார்த்த நாள்: 15 December 2021.