பிசுமத்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுமத்(III) அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசுமத்(III) அயோடைடு
வேறு பெயர்கள்
பிசுமத் அயோடைடு, பிசுமத் மூவயோடைடு
இனங்காட்டிகள்
7787-64-6
ChemSpider 21172753
InChI
 • InChI=1/Bi.3HI.3H/h;3*1H;;;/q+3;;;;;;/p-3/rBiH3.3HI/h1H3;3*1H/q+3;;;/p-3
  Key: HXTWPIJUKIDKIH-ZPTXHWADAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24860889
SMILES
 • [I-].[I-].[I-].[BiH3+3]
பண்புகள்
BiI3
வாய்ப்பாட்டு எடை 589.69 கி/மோல்
தோற்றம் பசுமையும் கருப்புமான படிகங்கள்
அடர்த்தி 5.778 கி/செ.மீ3
உருகுநிலை 408.6 °C (767.5 °F; 681.8 K)
கொதிநிலை 542 °C (1,008 °F; 815 K)
0.7761 மி.கி/100 மி.லி (20 °செ)
கரைதிறன் 50 கி/100 மி.லி எத்தனால்
50 கி/100 மி.லி 2M ஐதரோகுளோரிக் அமிலம்
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம், hR24
புறவெளித் தொகுதி R-3, No. 148
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு அரிக்கும் (C)
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் S26, S27, S36/37/39, S45[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிசுமத்(III) புளோரைடு
பிசுமத்(III) குளோரைடு
பிசுமத்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நைட்ரசன் மூவயோடைடு
பாசுபரசு மூவயோடைடு
ஆண்டிமனி மூவயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிசுமத்(III) அயோடைடு (Bismuth(III) iodide) என்பது BiI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. முன்னர் இச்சேர்மம் பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டது[2] [3]. அறுகோணப் பக்க நெருக்கப் பொதிவு அணிக்கோவையில் நிரம்பியுள்ள அயோடைடு மையங்கள், மற்றும் மூன்றில் இரண்டு பங்கு எண்முக இடைவெளிகளில் நிரப்பியுள்ள பிசுமத் மையங்கள் ஆகியவற்றால் ஆன தெளிவான படிக அமைப்பை பிசுமத்(III) அயோடைடு ஏற்றுள்ளது[4] [5]

தயாரிப்பு[தொகு]

பிசுமத் தூள் மற்றும் அயோடினின் நெருங்கிய கலவையை சூடுபடுத்துவதால்:[6] பிசுமத்(III) அயோடைடு உண்டாகிறது.

2Bi + 3I2 → 2BiI3

பிசுமத் ஆக்சைடை நீர்த்த ஐதரோ அயோடிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதாலும் இதைத் தயாரிக்கலாம்:[7]

Bi2O3(s) + 6HI(aq) → 2BiI3(s) + 3H2O(l)

வினைகள்[தொகு]

பிசுமத்(III) அயோடைடு தண்ணீரில் கரைவதில்லை. இதனுடைய நீர்த்த கரைசலில் Bi3+ அயனிகள் உள்ளனவா என்பதை அயோடின் மூலமான பொட்டாசியம் அயோடைடைச் சேர்த்து சோதித்து அறிய முடியும். கருப்புநிற வீழ்படிவு தோன்றினால் கரைசலில் Bi3+ அயனிகள் இருப்பு உறுதிப்படுத்தப்படுகிறது[8].

ஆலைடு வழங்கிகளுடன் சேர்த்து பிசுமத்(III) அயோடைடைச் சூடுபடுத்தினால் அயோடோ பிசுமத்(III) எதிர்மின் அயனிகள் உருவாகின்றன:[9]

2 NaI + BiI3 → Na2[BiI5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "341010 Bismuth(III) iodide 99%". Sigma-Aldrich. http://www.sigmaaldrich.com/catalog/search/ProductDetail/ALDRICH/341010. பார்த்த நாள்: 2008-06-19. 
 2. "Bismuth iodide", McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms, McGraw-Hill, 2003, retrieved 2008-06-19
 3. Turner, Jr., Francis M.; Berolzheimer, Daniel D.; Cutter, William P.; Helfrich, John (1920), The Condensed Chemical Dictionary, New York: Chemical Catalog Company, p. 107, retrieved 2008-06-19
 4. Smart, Lesley; Moore, Elaine A. (2005), Solid State Chemistry: An Introduction, CRC Press, p. 40, ISBN 0-7487-7516-1, retrieved 2008-06-19
 5. Mackay, Rosemary Ann; Henderson, W. (2002), Introduction to Modern Inorganic Chemistry, CRC Press, pp. 122–6, ISBN 0-7487-6420-8, retrieved 2008-06-19
 6. Erdmann, Hugo; Dunlap, Frederick Leavy (1900), Handbook of Basic Tables for Chemical Analysis, New York: John Wiley & Sons, p. 76, retrieved 2008-06-19
 7. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 559. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
 8. Bruno, Thomas J.; Svoronos, Paris D. N. (2003), Handbook of Basic Tables for Chemical Analysis, CRC Press, p. 549, ISBN 0-8493-1573-5, retrieved 2008-06-19
 9. Norman, Nicholas C. (1998), Chemistry of Arsenic, Antimony and Bismuth, Springer, pp. 168–70, ISBN 0-7514-0389-X, retrieved 2008-06-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்(III)_அயோடைடு&oldid=3384824" இருந்து மீள்விக்கப்பட்டது