தெலூரியம் நான்கையோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலூரியம் நான்கையோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தெலூரியம்(IV) அயோடைடு
இனங்காட்டிகள்
7790-48-9
EC number 232-210-5
InChI
  • InChI=1S/I4Te/c1-5(2,3)4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82255
  • [Te](I)(I)(I)I
பண்புகள்
TeI4
வாய்ப்பாட்டு எடை 635.218 கி/மோல்
தோற்றம் கருப்புநிறப் படிகங்கள்
அடர்த்தி 5.05 கி/செ.மீ³, திண்மம்
உருகுநிலை 280 °C (536 °F; 553 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தெலூரியம் நான்கையோடைடு (Tellurium tetraiodide) என்பது TeI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் நான்கு பகுதி திண்ம அமைப்பைக் கொண்டு TeCl4 மற்றும் TeBr4 சேர்மங்களில் இருந்து மாறுபடுகிறது. தெலூரியம் நான்கையோடைடில் Te அணுக்கள் எண்முக அமைப்பில் ஒருங்கிணைப்பு கொண்டு எண்முகத்தின் விளிம்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன[1] In TeI4 the Te atoms are octahedrally coordinated and edges of the octahedra are shared.[1].

தெலூரியம் மற்றும் அயோடின் ஆகியன வினைபுரிவதாலும் அல்லது தெலூரியம் மற்றும் அயோடோ மீத்தேன் (CH3I ) வினைபுரிவதாலும் தெலூரியம் நான்கையோடைடு உருவாகிறது. ஆவிநிலையில் TeI4 பிரிகையடைகிறது. :[2]

TeI4 → TeI2 + I2

இச்சேர்மம் உருகிய நிலையில் நல்லதொரு கடத்தியாக இருக்கிறது. இதனால் TeI3+ மற்றும் I அயனிகளாகப் பிரிகையடைகிறது. அசெட்டோநைட்ரைல் போன்ற கரைப்பான்களில் (CH3CN) அயன அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன. இச்சேர்மங்களால் இக்கரைசல் கடத்தும் பண்பைப் பெறுகிறது:[2]

TeI4 + 2 CH3CN → (CH3CN)2TeI3+ + I

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. 2.0 2.1 Inorganic Chemistry,Egon Wiberg, Arnold Frederick Holleman Elsevier 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரியம்_நான்கையோடைடு&oldid=3384816" இலிருந்து மீள்விக்கப்பட்டது