அயோடின் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடின் ஐந்தாக்சைடு (I2O5)

அயோடின் ஆக்சைடுகள் (Iodine oxides) என்பவை ஆக்சிஜன் மற்றும் அயோடின் தனிமங்கள் இணைந்து உருவாகும் கலவைகள் ஆகும். இந்தக் கலவைகளில் ஒரு சில சேர்மங்களின் வேதியியல் மட்டுமே நன்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற சேர்மங்களின் நிலையில் சிக்கலே நிலவுகிறது. இவற்றில் பல வளிமண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ளன மற்றும் இவை குறிப்பாக கடல் எல்லை அடுக்குகளில் முக்கியத்துவத்துடன் இருக்க வேண்டுமென நம்பப்படுகிறது[1].

அயோடின் ஆக்சைடுகள்[2]
மூலக்கூற்று வாய்ப்பாடு I2O IO[3] IO2 I2O4 I2O5 I4O9
பெயர் ஈரயோடின் ஓராக்சைடு அயோடின் ஓராக்சைடு அயோடின் ஈராக்சைடு ஈரயோடின் நான்காக்சைடு ஈரயோடின் ஐந்தாக்சைடு நான்கயோடின் ஓராக்சைடு
அமைப்பு I2O IO IO2 (IO2)2 O(IO2)2 I(OIO2)3
சிஏஎசு எண் 39319-71-6 14696-98-1 13494-92-3 1024652-24-1 12029-98-0 66523-94-2
தோற்றம் தெரியவில்லை செவ்வூதா நிற வாயு மஞ்சள் நிறத்திண்மம் மஞ்சள் நிற திண்மம் வெண் படிகத் திண்மம் அடர் மஞ்சள் நிறத் திண்மம்
ஆக்சிசனேற்ற நிலை 1+ +2 +4 +3 மற்றும் +5 +5 +3 மற்றும் +5
உருகுநிலை தனித்து அறியப்படவில்லை தனித்து அறியப்படவில்லை தனித்து அறியப்படவில்லை சிதைவடைகிறது.100 °செ சிதைவடைகிறது.300–350 °செ சிதைவடைகிறது. 75 °செ
நீர் ஒப்படர்த்தி 4.2 4.8
தண்ணீரில் கரைதிறன் சிதைவடைகிறது HIO3 + I2 187 கி/100 மோல் சிதைவடைகிறது. HIO3 + I2

ஈரயோடின் ஓராக்சைடு (Diiodine monoxide) சேர்மத்தின் நிலை பெரும்பாலும் கொள்கை ஆய்வு பொருளாகவே உள்ளது[4].ஆனால், HgO மற்றும் I2 வினையால் இருகுளோரின் ஓராக்சைடு தயாரிப்பது போல ஈரயோடின் ஓராக்சைடையும் தயாரிக்கலாம் என்பதற்கு சில சான்றுகள் கிடைக்கின்றன[5]. இச்சேர்மம் அதிக நிலைப்புத்தன்மையற்றது என்றாலும் ஆல்கீன்களுடன் வினைபுரிந்து ஆலசனேற்றப் பொருட்களை கொடுக்கிறது.[6]

தனியுறுப்பு அயோடின் ஆக்சைடு (IO), அயோடின் ஈராக்சைடு (IO2) மற்றும் ஈரயோடின் நான்காக்சைடு முதலான அனைத்தும் வளிமண்டல வேதியியலோடும் தங்களுக்குள்ளும் உள்ளிணைப்பு கொண்டு காணப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் கடல் எல்லை அடுக்குகளில் ஈரயோடோ மீத்தேனின் ஒளியாக்சிசனேற்றத்தால் இவை உருவாகின்றன. கடலில் உள்ள பெரும்பாசியின கடல் களைகள் ஈரயோடோ மீத்தேனை உற்பத்தி செய்கின்றன[7]. மிகக் குறைவான அளவில் இவை உற்பத்தி செய்யப்பட்டாலும் இவை வலிமையான ஓசோன் குறைப்பு முகவர்கள் எனக் கருதப்படுகின்றன.[8][9]

ஈரயோடின் ஐந்தாக்சைடு (Diiodine pentoxide) என்பது I2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடிக் அமிலத்தினுடைய நீரிலியான இவ்வுப்பு மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டிருக்கிறது.

நான்கயோடின் ஒன்பதாக்சைடு (Tetraiodine nonoxide) என்பது I4O9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் I2 உடன் O3 வாயு நிலையில் வினைபுரிவதால் உண்டாகிறது. ஆனால் இச்சேர்மம் விரிவாக ஆராயப்படவில்லை.[10]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kaltsoyannis, Nikolas; Plane, John M. C. (2008). "Quantum chemical calculations on a selection of iodine-containing species (IO, OIO, INO3, (IO)2, I2O3, I2O4 and I2O5) of importance in the atmosphere". Physical Chemistry Chemical Physics 10 (13): 1723. doi:10.1039/B715687C. 
  2. Lide, D. R., தொகுப்பாசிரியர் (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0486-5. 
  3. Nikitin, I V (31 August 2008). "Halogen monoxides". Russian Chemical Reviews 77 (8): 739–749. doi:10.1070/RC2008v077n08ABEH003788. 
  4. Novak, Igor (1998). "Theoretical study of I2O". Heteroatom Chemistry 9 (4): 383–385. doi:10.1002/(SICI)1098-1071(1998)9:4<383::AID-HC6>3.0.CO;2-9. 
  5. Forbes, Craig P.; Goosen, André; Laue, Hugh A. H. (1974). "Hypoiodite reaction: kinetic study of the reaction of 1,1-diphenyl-ethylene with mercury(II) oxide iodine". Journal of the Chemical Society, Perkin Transactions 1: 2350. doi:10.1039/P19740002350. 
  6. Cambie, Richard C.; Hayward, Rodney C.; Lindsay, Barry G.; Phan, Alice I. T.; Rutledge, Peter S.; Woodgate, Paul D. (1976). "Reactions of iodine oxide with alkenes". Journal of the Chemical Society, Perkin Transactions 1 (18): 1961. doi:10.1039/P19760001961. 
  7. Hoffmann, Thorsten; O'Dowd, Colin D.; Seinfeld, John H. (15 May 2001). "Iodine oxide homogeneous nucleation: An explanation for coastal new particle production". Geophysical Research Letters 28 (10): 1949–1952. doi:10.1029/2000GL012399. 
  8. Saiz-Lopez, A.; Fernandez, R. P.; Ordóñez, C.; Kinnison, D. E.; Gómez Martín, J. C.; Lamarque, J.-F.; Tilmes, S. (10 December 2014). "Iodine chemistry in the troposphere and its effect on ozone". Atmospheric Chemistry and Physics 14 (23): 13119–13143. doi:10.5194/acp-14-13119-2014. 
  9. Cox, R. A.; Bloss, W. J.; Jones, R. L.; Rowley, D. M. (1 July 1999). "OIO and the atmospheric cycle of iodine". Geophysical Research Letters 26 (13): 1857–1860. doi:10.1029/1999GL900439. 
  10. Sunder, S.; Wren, J. C.; Vikis, A. C. (December 1985). "Raman spectra of I4O9 formed by the reaction of iodine with ozone". Journal of Raman Spectroscopy 16 (6): 424–426. doi:10.1002/jrs.1250160611. https://archive.org/details/sim_journal-of-raman-spectroscopy_1985-12_16_6/page/424. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_ஆக்சைடு&oldid=3520500" இலிருந்து மீள்விக்கப்பட்டது