உள்ளடக்கத்துக்குச் செல்

பாதரச(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரச(II) அயோடைடு
Mercury(II) iodide

பாதரச(II) அயோடைடு (α வடிவம்)

பாதரச(II) அயோடைடு (β வடிவம்)

β (இடது) மற்றும் α (வலது) வடிவங்கள்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெர்க்குரி டை அயோடைடு
வேறு பெயர்கள்
பாதரச அயோடைடு
சிவப்பு பாதரசம் (α வடிவ பாதரசம்)
இனங்காட்டிகள்
7774-29-0 Y
ChEBI CHEBI:49659 Y
ChemSpider 22893 Y
DrugBank DB04445 Y
InChI
  • InChI=1S/Hg.2HI/h;2*1H/q+2;;/p-2 Y
    Key: YFDLHELOZYVNJE-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Hg.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: YFDLHELOZYVNJE-NUQVWONBAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24485
  • I[Hg]I
UNII R03O05RB0P Y
பண்புகள்
HgI2
வாய்ப்பாட்டு எடை 454.40 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சு சிவப்புத் தூள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 6.36 கி/செ.மீ3
உருகுநிலை 259 °C (498 °F; 532 K)
கொதிநிலை 350 °C (662 °F; 623 K)
0.006 கி/100 மி.லி
கரைதிறன் ஆல்ககால், ஈதர், அசிட்டோன், குளோரோஃபார்ம், எத்தில் அசிட்டேட்டு, CS2, ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியனவற்றில் சிறிதளவு கரையும்.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.455
கட்டமைப்பு
படிக அமைப்பு நான்முகம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு மிகவும் நச்சானது (T+)
சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R26/27/28, R33, R50/53
S-சொற்றொடர்கள் (S1/2), S13, S28, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச(II) புளோரைடு
பாதரச(II) குளோரைடு
பாதரச(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக அயோடைடு
காட்மியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பாதரச(II) அயோடைடு (Mercury(II) iodide) என்பது HgI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சுச் சிவப்பு நிற படிகங்களாக இச்சேர்மம் தோற்றமளிக்கிறது. பாதரச(II) குளோரைடு போல் தண்ணீரில் எளிதில் கரையாமல், பாதரச(II) அயோடைடு சிறிதளவே கரைகிறது. (மில்லியனுக்கு 100 பகுதிகள்)

வெப்பம் (இயற்பியல்), ஒளி, புரோமைடுகள், குளோரைடுகள், அமோனியா, காரங்கள், சயனைடுகள், செப்பு உப்புகள், ஈய உப்புகள், அயோடோபார்ம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு உள்ளிட்ட சேர்மங்கள் மற்றும் நிபந்தனைகள் பாதரச(II) அயோடைடிடம் இருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்.

பண்புகள்

[தொகு]

வெப்ப நிலை மாற்றத்திற்கேற்ப பாதரச(II) அயோடைடு வண்ண மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. 126 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும் போது இது, ஆல்பா படிகநிலை வடிவத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிற பீட்டா வடிவத்திற்கு நிலை மாற்றமும் அடைகிறது. நிலை மாறிய இம்மாதிரி குளிர்ச்சி அடைந்தால் படிப்படியாக தன்னுடைய அசல் நிறத்தைப் பெறுகிறது. வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நிறமாற்றத்தை விளக்க பெரும்பாலும் பாதரச(II) அயோடைடு பயன்படுத்தப்படுகிறது.[1].

தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் அயோடைடின் நீர்த்த கரைசலை, நீர்த்த பாதரச(II) குளோரைடு கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்கினால் பாதரச(II) அயோடைடு வீழ்படிவாகிறது. வீழ்படிவை வடிகட்டி தண்ணீரால் கழுவி 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலர்த்திப் பயன்படுத்தலாம்.

பயன்கள்

[தொகு]

அமோனியாவின் இருப்பை கண்டறிய உதவும் நெசுலர் வினையாக்கியைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

குறை கடத்திப் பொருளான இச்சேர்மம், அறை வெப்பநிலையில் எக்சு கதிர் மற்றும் காமா கதிர்களைக் கண்டறியவும் படம்பிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது[2] .

காக்சினைட்டு கனிமம் போல பாதரச(II) அயோடைடும் இயற்கையில் மிக அரிதாக கிடைக்கக் கூடிய கனிமமாக இருக்கிறது.

எலும்பு வெளிவளர்ச்சி நோய்க்காண கொப்புளக் களிம்பாகவும், உயவுநீர் பைகளின் வீக்கத்திற்கும் கால்நடை மருத்துவத்தில் பாதரச(II) அயோடைடு பயன்படுகிறது.

பல்வேறு வினைகளில் பாதரச(II) அயோடைடு வீழ்படிவாகக் கிடைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thermochromism: Mercury(II) Iodide. Jchemed.chem.wisc.edu. Retrieved on 2011-06-02.
  2. Simage, Oy U.S. Patent 65,09,203  Semiconductor imaging device and method for producing same, Issue date: Jan 21, 2003
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச(II)_அயோடைடு&oldid=3384823" இலிருந்து மீள்விக்கப்பட்டது