பாதரச(I) ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரச(I) ஐதரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச (I) ஐதரைடு
வேறு பெயர்கள்
டைமெர்குரேன்
மெர்குரஸ் ஐதரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Hg.H
    Key: DJSHOLCMNYJYSS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Hg][H]
பண்புகள்
HgH
வாய்ப்பாட்டு எடை 201.60 கி மோல்l−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பாதரச(I) ஐதரைடு (Mercury(I) hydride) முறையான பெயர் பாதரச ஐதரைடு, mercury hydride) என்பது HgH என்ற விகிதாச்சார மூலக்கூற்று வாய்பாடுடைய கனிமச் சேர்மமாகும். இதுவரையிலும், பாதரச ஐதரைடு அதிக அளவில் கிடைக்கப்பெறவில்லை. இதனுடைய பெரும்பாலான பண்புகள் அறியப்படாததாகவே உள்ளது. இருப்பினும் மூலக்கூறு நிலையில் உள்ள HgH மற்றும் Hg2H2 மூலக்கூறு வாய்பாடுகளை உடைய பாதரச (I) ஐதரைடுகள் திண்ம வளித் தளத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. மூலக்கூறு நிலையில் உள்ள  ஐதரைடுகள் வெப்பத்தால் எளிதில் சிதையக்கூடியவை (நிலைத்தன்மையற்றவை). சேர்மமானது தெளிவாக பண்புகளடிப்படையில் வரையறுக்கப்படாத நிலையில், இச்சேர்மத்தின் பல பண்புகள் கணிப்பிய வேதியியல் மூலமாகவே கணிக்கப்பட்டுள்ளன.

மூலக்கூறு வடிவங்கள்[தொகு]

வரலாறு[தொகு]

1979 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த வேதிய இயற்பியலார்கள் எக்கெர் மற்றும் கெர்பெர் மற்றும் சோவியத் வேதிய இயற்பியலார்கள் கோல்பிசெவா மற்றும் கோல்பிசெவ் தனித்தனியாக, கருத்தியல்ரீதியாக மூலக்கூறு லேசரில் பாதரச (I) ஐதரைடை வளர்த்தெடுப்பது சாத்தியம் என்பதைக் கண்டறிந்தனர்.

வேதியியல் பண்புகள்[தொகு]

பாதரச (I) ஐதரைடு ஒரு நிலைத்தன்மையற்ற வாயுவாகும். மேலும், இந்த வாயுவானது, தொகுதி 12-இன் கனமான ஒற்றை ஐதரைடுமாகும்.[1] பாதரச (I) ஐதரைடின் இயைபானது 0.50% ஐதரசனையும் மற்றும் 99.50% பாதரசத்தையும் கொண்டுள்ளது. பாதரச (I) ஐதரைடில், பாதரசத்தின் மின்னெதிர்த்தன்மை ஐதரசனுடையதைக் காட்டிலும் குறைவாக இருக்கும் காரணத்தால், ஐதரசன் மற்றும் பாதரசம் ஆகியவற்றின் வழக்கமான ஆக்சிசனேற்ற நிலைகள் முறையே −1 மற்றும் +1 ஆக உள்ளது. MH (M = Zn-Hg) என்ற வாய்பாடை உடைய உலோக ஐதரைடுகளின் நிலைத்தன்மையானது உலோகத்தின் அணு எண் அதிகரிக்க, அதிகரிக்க அதிகரிக்கும்

Hg-H பிணைப்பானது மிகவும் வலிமை குறைந்த பிணைப்பாக இருப்பதால் சேர்மமானது 6 கெல்வின் வெப்பநிலை வரையில் மட்டுமே அணி தனியாக்கல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. [2][3]  டைஐதரைடும், HgH2, இதே  முறையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதை ஒத்த சேர்மமான Hg2H2 என்ற வாய்பாடை உடைய பிஸ்(ஐதரைடோபாதரசம்)(HgHg) பாதரச (I) ஐதரைடின் இருபடியாக கருதப்படுகிறது. இச்சேர்மம் தன்னிச்சையாக சிதைவடைந்து ஒற்றை மூலக்கூறு வடிவத்திற்கு மாறுகிறது.

உறுப்பின் தன்மை (Radicality)[தொகு]

ஐதரைடோபாதரசம் போன்ற பாதரச கூட்டுச் சேர்மங்களில் மைய அணுவான பாதரசமானது சேர்க்கை முறையில் ஒற்றை எதிர்மின்னியை ஏற்கவோ, வழங்கவோ முடியும்.

HgH + R → HHgR

எதிர்மின்னி வழங்கலை ஏற்றுக்கொள்ளும் தன்மையின் காரணமாக, ஐதரைடோபாதரசமானது உறுப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. இது ஒரு மிதமான வினைபடுதன்மை கொண்ட ஒற்றைத்தனி உறுப்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mercury hydride". Chemistry WebBook. USA: National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 14 October 2012.
  2. Aldridge, Simon; Downs, Anthony J. (2001). "Hydrides of the Main-Group Metals: New Variations on an Old Theme". Chemical Reviews 101 (11): 3305–65. doi:10.1021/cr960151d. பப்மெட்:11840988. 
  3. Knight, Lon B. (1971). "Hyperfine Interaction, Chemical Bonding, and Isotope Effect in ZnH, CdH, and HgH Molecules". The Journal of Chemical Physics 55 (5): 2061. doi:10.1063/1.1676373. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச(I)_ஐதரைடு&oldid=2688234" இலிருந்து மீள்விக்கப்பட்டது