பாதரசம்(II) சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரசம்(II) சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெர்க்குரிக் சிடீயரேட்டு, மெர்க்குரிக் டைசிடீயரேட்டு, பாதரச டையாக்டாடெக்கானேட்டு
இனங்காட்டிகள்
645-99-8 Y
ChemSpider 62735
EC number 211-458-8
InChI
  • InChI=1S/2C18H36O2.Hg/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2*2-17H2,1H3,(H,19,20);/q;;+2/p-2
    Key: RRFMRVBJWLMSAB-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69531
SMILES
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Hg+2]
UNII AZ2X2WK6RN
பண்புகள்
C
36
H
70
HgO
4
வாய்ப்பாட்டு எடை 767.529
தோற்றம் மஞ்சள் நிற மெழுகு
உருகுநிலை 112.2 °C (234.0 °F; 385.3 K)
கொதிநிலை 359.4 °C (678.9 °F; 632.5 K)
கரையாது
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 162.4 °C (324.3 °F; 435.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பாதரசம்(II) சிடீயரேட்டு (Mercury(II) stearate) C36H70HgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பாதரசம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2] உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மற்றும் தோல் உறிஞ்சுதல் ஆகியன நேரிட்டால் இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.

தயாரிப்பு[தொகு]

பாதரசம்(II) குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது பரிமாற்ற வினையில் பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.

மெர்குரியசு ஆக்சைடை சிடீயரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் பாதரசம்(II) சிடீயரேட்டு கிடைக்கும்.[3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

மஞ்சள் நிற மெழுகுப் பொருளாக பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.[4]

கொழுப்பு எண்ணெய்களில் கரையும். நீர் அல்லது ஆல்ககாலில் கரையாது.[5]

பயன்கள்[தொகு]

பாதரசம்(II) சிடீயரேட்டு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது.[5] பீங்கான் உற்பத்தியில் ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "CAS 645-99-8 Mercury stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
  2. Lewis, Robert A. (1 April 2016) (in en). Hawley's Condensed Chemical Dictionary. John Wiley & Sons. பக். 878. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-119-26784-3. https://books.google.com/books?id=KPrfCwAAQBAJ&dq=mercuric+stearate&pg=PA878. பார்த்த நாள்: 15 February 2023. 
  3. (in en) Works of the Cavendish Society: Gmelin, Leopold. Hand-book of chemistry. 18 v. & index. 1848-72. 1866. பக். 112. https://books.google.com/books?id=z-AJAAAAIAAJ&dq=mercuric+stearate&pg=PA112. பார்த்த நாள்: 15 February 2023. 
  4. Morris, Christopher G.; Press, Academic; Morris, Christopher W. (27 August 1992) (in en). Academic Press Dictionary of Science and Technology. Gulf Professional Publishing. பக். 1350. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-200400-1. https://books.google.com/books?id=nauWlPTBcjIC&dq=mercuric+stearate&pg=PA1350. பார்த்த நாள்: 15 February 2023. 
  5. 5.0 5.1 "MERCURY STEARATE 645-99-8 wiki" (in ஆங்கிலம்). GuideChem. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரசம்(II)_சிடீயரேட்டு&oldid=3736173" இலிருந்து மீள்விக்கப்பட்டது