பாதரச செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரச(II) செலீனைடு
Mercury(II) selenide
பாதரச(II) செலீனைடு அலகு கூடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச செலீனைடு
இனங்காட்டிகள்
20601-83-6 Yes check.svgY
EC number 243-910-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 88609
பண்புகள்
HgSe
வாய்ப்பாட்டு எடை 279.55 கி/மோல்
தோற்றம் அடர் சாம்பல் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 8.266 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு sphalerite
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
247 கிலோயூல்/மோல்
வெப்பக் கொண்மை, C 178 யூல் கி.கி−1 கெல்வின்−1
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H330, H373, H410
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச ஆக்சைடு
பாதரச சல்பைடு
பாதரச தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக செலீனைடு
காட்மியம் செலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பாதரச செலீனைடு (Mercury selenide) என்பது HgSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசமும் செலீனியமும் சேர்ந்து அடர் சாம்பல் நிறத்தில் இது படிகத் திண்மமாக உருவாகிறது. அரை உலோகமான இது இசுபேலரைட்டு கட்டமைப்பில் 0.608 நானோமீட்டர் என்ற அணிக்கோவை மாறிலி மதிப்பை பெற்றுள்ளது.

பாதரச செலீனைடு பின்வரும் வேதிச் சேர்மங்களையும் குறிக்கலாம்: HgSe2 மற்றும் HgSe8. HgSe கண்டிப்பாக பாதரசம்(II) செலீனைடைத்தான் குறிக்கும்.

இயற்கையில் டைமானைட்டு என்ற கனிமமாக பாதரச செலீனைடு தோன்றுகிறது.

மற்ற II-VI குழு சேர்மங்களுடன் சேர்ந்து பாதரச செலீனைடின் கூழ்ம மீநுண்படிகங்கள் உருவாகும்.

பயன்கள்[தொகு]

  • எஃகு தயாரிக்கும் ஆலைகளில் வெளியேறும் வாயுக்களில் இருந்து பாதரசத்தை அகற்ற வடிகட்டிகளில் செலீனியம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உருவாகும் திண்மம் பாதரச செலீனைடு ஆகும்.
  • HgSe ஆனது துத்தநாக செலீனைடு அல்லது துத்தநாக ஆக்சைடு போன்ற பரந்த இடைவெளி II-VI குறைக்கடத்திகளுக்கு ஓம்விதிசார் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

நச்சுத்தன்மை[தொகு]

பாதரச செலீனைடு இதன் கரையாத தன்மையால் உட்கொள்ளப்படாத வரை நச்சுத்தன்மையற்றதாகும். நச்சுத்தன்மை வாய்ந்த ஐதரசன் செலீனைடு புகை இது அமிலங்களுடன் வினைபடும்போது உருவாகலாம். ஒப்பீட்டளவில் HgSe ஒரு நிலையான சேர்மமாகும். அடிப்படையான பாதரசம் அல்லது பல கரிமவுலோக பாதரச சேர்மங்களைக் காட்டிலும் இது குறைவான நச்சுத்தன்மை கொண்டது. செலீனியம் பாதரசத்துடன் கலக்கும் திறன், அதிக பாதரச அளவு இருந்தாலும் ஆழ்கடல் மீன்களில் பாதரச நச்சுத்தன்மை இல்லாததற்கு ஒரு காரணமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Watanabe, C. (2002). "Modification of Mercury Toxicity by Selenium: Practical Importance?". The Tohoku Journal of Experimental Medicine 196 (2): 71–77. doi:10.1620/tjem.196.71. பப்மெட்:12498318. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச_செலீனைடு&oldid=3391413" இருந்து மீள்விக்கப்பட்டது