ஈயம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈயம்(II) அயோடைடு
ஈயம்(II) அயோடைடு Lead(II) iodide
Lead iodide.jpg
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிளம்பசு அயோடைடு
இனங்காட்டிகள்
10101-63-0 Yes check.svgY
ChemSpider 23305 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 167719
UNII OTL90F2GLT Yes check.svgY
பண்புகள்
PbI2
வாய்ப்பாட்டு எடை 461.01 கி/மோல்
தோற்றம் அடர் மஞ்சள் நிறத் தூள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 6.16 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 872 °C (1,602 °F; 1,145 K)
0.044 கி/100 மி.லி (0 °செ)
0.0756 கி/100 மி.லி (20 °செ)[1]
0.41 g/100 mL (100 °C)[2]
4.41 x 10−9 (20 °செ)
கரைதிறன் எத்தனால்l, குளிர்ந்த HCl ஆகியவற்றில் கரையாது.
காரங்கள், KI கரைசல் ஆகியவற்றில் கரையும்.
Band gap 2.3 eV
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hP3
புறவெளித் தொகுதி P-3m1, No. 164
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Repr. Cat. 1/3
தீங்கானது (Xn)
சுற்று சூழலுக்கு ஆபத்தானது (N)
R-சொற்றொடர்கள் R61, R20/22, R33, R62, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஈயம்(II) புளோரைடு
ஈயம்(II) குளோரைடு
ஈயம்(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வெள்ளீயம்(II) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஈயம்(II) அயோடைடு (Lead(II) iodide) என்பது PbI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பிளம்பசு அயோடைடு என்றும் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் அடர்மஞ்சள் நிறம் கொண்ட திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் சூடுபடுத்தும் போது மீட்சியடையக்கூடிய செங்கல் சிவப்பு நிறமாக மாறுகிறது.

படிகநிலையில் இருக்கும் போது எக்சுகதிர் மற்றும் காமாக் கதிர்கள் உள்ளிட்ட உயர் ஆற்றல் ஒளியணுக்களை கண்டறிய உதவும் ஒரு கண்டுபிடிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஈயம்((II) அயோடைடில் ஈயம் கலந்து இருப்பதால் இது ஒரு நச்சாகச் செயல்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் அயோடின் மஞ்சள் என்ற பெயரில் ஓவியர்கள் இதை சாயமாகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இது மிகவும் நிலைப்புத்தன்மையற்றுக் காணப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

ஈயம்((II) நைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் அயோடைடு கரைசல்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மஞ்சள் நிற வீழ்படிவாக ஈயம்((II) அயோடைடு கிடைக்கிறது.

Pb(NO3)2(aq) + 2KI(aq) → PbI2(s) + 2KNO3(aq)

அதிக அளவு பொட்டாசியம் அயோடைடு கரைசலில் இம்மஞ்சள் நிற வீழ்படிவு கரைந்து நிறமற்ற நான்கையோடோ பிளம்பேட்டு கரைசல் உருவாகிறது.

Pb(I2)(s) + 2KI(aq) ⇄ K2PbI4(aq)

மேற்கோள்கள்[தொகு]

  1. NIST-data review 1980
  2. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, ISBN 0-07-049439-8

புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lead(II) iodide
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயம்(II)_அயோடைடு&oldid=3384752" இருந்து மீள்விக்கப்பட்டது