இண்டியம்(III) அயோடைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
இண்டியம் மூவயோடைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 13510-35-5 | |
| ChemSpider | 75371 |
| EC number | 236-839-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83539 |
| |
| பண்புகள் | |
| InI3 | |
| வாய்ப்பாட்டு எடை | 495.53 |
| தோற்றம் | மஞ்சள் திண்மம் |
| அடர்த்தி | 4.69 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 210 °C (410 °F; 483 K) |
| கொதிநிலை | 500 °C (932 °F; 773 K) |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இண்டியம்(III) புரோமைடு இண்டியம்(III) குளோரைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | அலுமினம் அயோடைடு காலியம்(III) அயோடைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இண்டியம்(III) அயோடைடு (Indium(III) iodide) InI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]ஐதரோ அயோடிக் அமிலத்தில் கரைந்த இண்டியத்தை ஆவியாக்குதல் மூலமாக இண்டியம்(III) அயோடைடு உருவாகிறது.[1]
பண்புகள்
[தொகு]
தனித்துவமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிற இண்டியம்(III) அயோடைடுகள் அறியப்படுகின்றன. 57 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிவப்பு நிற இண்டியம்(III) அயோடைடு மஞ்சள் நிற இண்டியம்(III) அயோடைடு சேர்மமாக மாற்றமடைகிறது. எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் சிவப்பு இண்டியம்(III) அயோடைடின் கட்டமைப்பை உறுதி செய்யவில்லை. ஆனால் நிறமாலையியல் ஆய்வுகள் ஆறு ஒருங்கிணைவுகளை இண்டியம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றன.[2] மஞ்சள் வடிவ இண்டியம்(III) அயோடைடில் (In2I6) 4 ஒருங்கிணைவு இண்டியம் மையங்கள் உள்ளன.