பிசுமாபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசுமாபென்சீன் (Bismabenzene) என்பது C5H6Bi என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம பிசுமத் சேர்மமாகும். இவ்வகைச் சேர்மங்களின் மூத்த உறுப்பினராக பிசுமாபென்சீன் கருதப்படுகிறது. பென்சீனுடன் தொடர்புடைய இச்சேர்மத்தில் உள்ள ஒரு கார்பன் அணுவானது பிசுமத் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. தொகுப்பு முறையில் பிசுமாபென்சீனைத் தயாரிக்க இயலும் ஆனால், இதை தனித்துப் பிரித்தெடுக்க இயலவில்லை [1][2].

1982 [3] ஆம் ஆண்டில் 4-ஆல்க்கைல் பதிலீடுகள் கொண்ட ஓரு நிலைப்புத்தன்மையற்ற வழிப்பொருள் கண்டறியப்பட்டது. இதனுடைய நிலைப்புத்தன்மை வடிவம் 2016 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது [1][4]. இவ்வழிப்பொருளில் இரண்டு டிரை(ஐசோபுரோப்பைல்)சிலைல் பதிலீடுகள் ஆர்த்தோ நிலையில் இடம்பெற்றிருந்தன. இச்சேர்மம், அலுமினாசைக்ளோயெக்சாடையீன், பிசுமத் முக்குளோரைடு மற்றும் டையசாபைசைக்ளோ அன்டெக்கேன் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Chemists create stable bismuth benzene derivative Fernando Gomollon-Bel By Fernando Gomollon-Bel 29 September 2016 https://www.chemistryworld.com/news/chemists-create-stable-bismuth-benzene-derivative/1017447.article
  2. Bismabenzene. Reaction of Group V heteroaromatic compounds with hexafluorobutyne Arthur J. Ashe III and Michael D. Gordon Journal of the American Chemical Society 1972 94 (21), 7596-7597 எஆசு:10.1021/ja00776a063 10.1021/ja00776a063
  3. Stabilization of stibabenzene and bismabenzene by 4-alkyl substituents Arthur J. Ashe III, Timothy R. Diephouse, and Maher Y. El-Sheikh Journal of the American Chemical Society 1982 104 (21), 5693-5699 {{DOI: 10.1021/ja00385a024}}
  4. An Isolable Bismabenzene: Synthesis, Structure, and Reactivity Takuya Ishii, Katsunori Suzuki, Taichi Nakamura, and Makoto Yamashita Journal of the American Chemical Society Article 2016 ASAP எஆசு:10.1021/jacs.6b08714 10.1021/jacs.6b08714


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமாபென்சீன்&oldid=3356229" இலிருந்து மீள்விக்கப்பட்டது