கடோலினியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடோலினியம்(III) அயோடைடு
Gadolinium(III) iodide
இனங்காட்டிகள்
13572-98-0 Y
ChemSpider 75418
EC number 236-997-6
InChI
  • InChI=1S/Gd.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: IZZTUGMCLUGNPM-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25212328
SMILES
  • [I-].[I-].[I-].[Gd+3]
பண்புகள்
GdI3
வாய்ப்பாட்டு எடை 537.96 கி/மோல்−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
உருகுநிலை 926 °செல்சியசு[1]
கொதிநிலை 1340 °செல்சியசு[2]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்[1]
H317, H360
P201, P280, P308+313[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கடோலினியம்(III) புளோரைடு
கடோலினியம்(III) குளோரைடு
கடோலினியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் யூரோப்பியம்(III) அயோடைடு
டெர்பியம்(III) அயோடைடு
சமாரியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கடோலினியம்(III) அயோடைடு (Gadolinium(III) iodide) GdI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கடோலினியத்தின் அயோடைடு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் அதிக அளவில் நீருறிஞ்சும் உப்பாகக் காணப்படுகிறது. பிசுமத்(III) அயோடைடு வகை படிக அமைப்பை கடோலினியம்(III) அயோடைடு கொண்டுள்ளது. காற்றில், இது விரைவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீரேற்றுகளை உருவாக்குகிறது. தொடர்புடைய கடோலினியம் ஆக்சைடு அயோடைடு உயர்ந்த வெப்பநிலையில் உடனடியாக உருவாகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

கடோலினியத்துடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கடோலினியம்(III) அயோடைடு உருவாகும்:[2]

2 Gd + 3 I2 → 2 GdI3

பாதரச(II) அயோடைடு சேர்மத்துடன் கடோலினியத்தை 500°செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் வினைபுரியச் செய்தாலும் கடோலினியம்(III) அயோடைடு உருவாகும்:[2]

கடோலினியம்(III) ஆக்சைடுடன் ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரேற்று வடிவம் படிகமாகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட நீரேற்று வடிவத்தை அமோனியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் நீரிலி வடிவ கடோலினியம்(III) அயோடைடு கிடைக்கும்.[2][3]

Gd2O3 + 6 HI → 2 GdI3 + 3 H2O

வினைகள்[தொகு]

ஆர்கான் வாயுச் சூழலில் கடோலினியம்(III) அயோடைடு கடோலினியம், துத்தநாகத்துடன் 850 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து Gd7I12Zn சேர்மத்தைக் கொடுக்கிறது.[4] மேலும் இது ஒரு டாண்ட்டலம் குழாயில் கடோலினியம், கார்பன் மற்றும் கடோலினியம் நைட்ரைடு ஆகியவற்றுவன் 897 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து Gd4I6CN என்ற கடோலினியம் நைட்ரோகார்பைடைக் கொடுக்கிறது.[5]

2 Gd + 3 HgI2 → 2 GdI3 + 3 Hg

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Sigma-Aldrich Co., product no. {{{id}}}.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1077.
  3. Kutscher, J.; Schneider, A. Preparation of anhydrous lanthanide halides, especially iodides. Inorganic and Nuclear Chemistry Letters, 1971. 7 (9): 815-819.
  4. Mar’yana Lukachuk, Lorenz Kienle, Chong Zheng, Hansjürgen Mattausch, Arndt Simon (2008-06-02). "Gd 7 I 12 Zn: A Group 12 Atom in the Octahedral Gd 6 Cluster" (in en). Inorganic Chemistry 47 (11): 4656–4660. doi:10.1021/ic800024n. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:18426200. https://pubs.acs.org/doi/10.1021/ic800024n. பார்த்த நாள்: 2022-07-08. 
  5. Mattausch, Hansjurgen; Borrmann, Horst; Eger, Roland; Kremer, R. K.; Simon, Arndt. Gd4I6CN: A carbide nitride with chains of Gd6(C2) octahedra and Gd6N2 double tetrahedra. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie (1994), 620 (11): 1889-1897.

மேலும் படிக்க[தொகு]

  • Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. Preparation and crystal data for lanthanide and actinide triiodides. Inorg. Chem., 1964. 3 (8): 1137-1240
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்(III)_அயோடைடு&oldid=3766373" இலிருந்து மீள்விக்கப்பட்டது