யூரோப்பியம்(II) தெலூரைடு
| பெயர்கள் | |
|---|---|
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 12020-69-8 | |
| ChemSpider | 74729 |
| EC number | 234-663-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82811 |
| |
| பண்புகள் | |
| EuTe | |
| வாய்ப்பாட்டு எடை | 279.56 கி/மோல் |
| அடர்த்தி | 6.48 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 1526 °C[1] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H301, H332 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P301+310, P304+340, P312, P405, P501 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
யூரோப்பியம்(II) தெலூரைடு (Europium(II) telluride) என்பது EuTe என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் தெலூரியமும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]500-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் யூரோப்பியம் மற்றும் தெலூரியம் தனிமங்களை வினைபுரியச் செய்து யூரோப்பியம்(II) தெலூரைடு தயாரிக்கப்படுகிறது.[2]
- Eu + Te -> EuTe
600 முதல் 850 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் வாயு ஓட்டத்தில் யூரோப்பியம்(II) ஐதரைடுடன் தெலூரியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) தெலூரைடு உருவாகும்.[2]
- EuH2 + Te -> EuTe + H2
பண்புகள்
[தொகு]யூரோப்பியம்(II) தெலூரைடு கருப்பு நிறத்தில் எதிர்பெர்ரோகாந்தப் பண்புடன் காணப்படுகிறது.[3] திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கனசதுரப் படிக வடிவத்தில் படிகமாகிறது.[1] மேலும், இப்படிகம் சோடியம் குளோரைடு படிகவடிவத்தை ஒத்து உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2012). CRC handbook of chemistry and physics: a ready reference book of chemical and physical data (93rd ed.). Boca Raton: CRC. ISBN 978-1-4398-8049-4.
- 1 2 Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. ISBN 978-3-432-02328-1.
- ↑ Coey, J. M. D. (2010-03-25). Magnetism and Magnetic Materials (in ஆங்கிலம்). Cambridge University Press. ISBN 978-1-139-48692-7.
- ↑ Szytula, Andrej; Leciejewicz, Janusz (1994-03-08). Handbook of Crystal Structures and Magnetic Properties of Rare Earth Intermetallics (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-0-8493-4261-5.