இரிடியம்(V) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(V) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் ஐம்புளோரைடு
இனங்காட்டிகள்
14568-19-5 Y
பண்புகள்
IrF5
வாய்ப்பாட்டு எடை 287.209 கி/மோல்
தோற்றம் மஞ்சள் திண்மம்
உருகுநிலை 104.5 °C (220.1 °F; 377.6 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம்(V) புளோரைடு, ஒசுமியம் ஐம்புளோரைடு, பிளாட்டினம்(V) புளோரைடு
தொடர்புடைய சேர்மங்கள் இரிடியம்(IV) புளோரைடு, இரிடியம் அறுபுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இரிடியம்(V) புளோரைடு (Iridium(V) fluoride) என்பது IrF5, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியமும் புளோரினும் சேர்ந்த இச்சேர்மம் 1965 ஆம் ஆண்டில் முதன்முதலாக நீல் பார்ட்லெட் என்பவரால் கண்டறியப்பட்டது[1]. அதிக வினைத்திறனுள்ள மஞ்சள் நிறத் திண்மமான இச்சேர்மம் குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது. இச்சேர்மத்தின் படிக அமைப்பு நான்கு பகுதிகளால் ஆனது. Ir4F20 சேர்மமானது எண்முக இரிடியம் அணுக்களின் ஒருங்கிணைப்பால் அமைந்துள்ளது[2]. RuF5 மற்றும் OsF5 சேர்மங்களின் படிக அமைப்புகளின் வடிவத்தை இவ்வடிவமும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. IrF6 சேர்மத்தை கட்டுப்படுத்தப்பட்ட சிதைவுக்கு உள்ளாக்கினால் இரிடியம்(V) புளோரைடு தயாரிக்கலாம்[2]. அல்லது, IrF6 சேர்மத்தை நீரற்ற HF இல் சிலிக்கான் தூள் அல்லது H2 சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Neil Bartlett and P. R. Rao (1965). "Iridium pentafluoride". Chem. Commun. (12): 252–253. doi:10.1039/C19650000252. 
  2. 2.0 2.1 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  3. Paine, Robert T.; Asprey, Larned B. (1975). "Reductive syntheses of transition metal fluoride compounds. Synthesis of rhenium, osmium, and iridium pentafluorides and tetrafluorides". Robert T. Paine, Larned B. Asprey 14 (5): 1111–1113. doi:10.1021/ic50147a030. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(V)_புளோரைடு&oldid=2696068" இலிருந்து மீள்விக்கப்பட்டது