உள்ளடக்கத்துக்குச் செல்

இரிடியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(III) புரோமைடு

Crystal structure
இனங்காட்டிகள்
10049-24-8 நீரிலி Y
13464-83-0 நான்குநீரேற்று Y
ChemSpider 74295
EC number 233-174-3
InChI
  • InChI=1S/3BrH.Ir/h3*1H;/q;;;+3/p-3
    Key: HTFVQFACYFEXPR-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82324
  • Br[Ir](Br)Br
பண்புகள்
Br3Ir
வாய்ப்பாட்டு எடை 431.93 g·mol−1
தோற்றம் செம்பழுப்பு நிறத் திண்மம்[1]
அடர்த்தி 6.82 கி·செ.மீ−3[2]
கரையாது[1]
கரைதிறன் அமிலம் மற்றும் காரங்களில் கரையாது[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரிடியம்(III) ஐதராக்சைடு
இரிடியம்(III) குளோரைடு
இரிடியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் உருத்தேனியம்(III) புரோமைடு
ரோடியம்(III) புரோமைடு
ஓசுமியம்(III) புரோமைடு
பிளாட்டினம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம்(III) புரோமைடு (Iridium(III) bromide) என்பது IrBr3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

இரிடியம்(II) புரோமைடுடன் புரோமினைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரிடியம்(III) புரோமைடு தயாரிக்கப்படுகிறது. இரிடியம்(IV) ஆக்சைடு இருநீரேற்றுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச்[1] சேர்த்து வினைபுரியச் செய்து இதன் நான்குநீரேற்று உருவாக்கப்படுகிறது. 8 வளிமண்டல அழுத்தத்தில் 570 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இரிடியம் மற்றும் புரோமின் தனிமங்களை நேரடியாக வினையில் ஈடுபடுத்தியும் இரிடியம்(III) புரோமைடு தயாரிக்கப்படுகிறது.[3]

பண்புகள்[தொகு]

இரிடியம்(III) புரோமைடு அடர் செம்பழுப்பு நிற திடப்பொருளாகும். நீர், அமிலங்கள் மற்றும் காரங்களில் இது கரையாது. சூடாக்கும்போது இரிடியம்(II) புரோமைடாக சிதைகிறது.[1] அலுமினியம்(III) குளோரைடு அல்லது குரோமியம்(III) குளோரைடு கட்டமைப்பு வகையின் மிகவும் ஒழுங்கற்ற அடுக்கு கட்டமைப்பில் இச்சேர்மம் படிகமாகிறது. ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பும் அலகு செலில் நான்கு வாய்ப்பாட்டு அலகுகளையும் கொண்டுள்ளது. இரேனியம்(III) குளோரைடு, இரேனியம்(III) புரோமைடு, α-இரிடியம்(III) குளோரைடு மற்றும் α-உருத்தேனியம்(III) குளோரைடு போன்றவற்றைப் போலவே இந்த ஒழுங்கற்ற கோளாறு உலோக அடுக்குகளை அடுக்கி வைப்பதால் ஏற்படுகிறது.[4] வெளிர் ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படும் நான்குநீரேற்று தண்ணீரில் சிறிதளவு கரையும். ஆனால் எத்தனால் மற்றும் ஈதரில் கரையாது. 100 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கப்படும் போது நீரை விடுவித்து கரும் பழுப்பு நிறமாக மாறுகிறது. அதிக வெப்பநிலையில் இரிடியம் மற்றும் புரோமினாக சிதைகிறது.[1] ஐதரோபுரோமிக் அமிலக் கரைசலில் கரைந்துள்ள செருமேனியம் இருபுரோமைடுடன் வினைபுரிந்து Ir-Ge பிணைப்பைக் கொண்ட ஒரு கலவையை உருவாக்குகிறது. மேலும் அதில் Cs+ அயனியைச் சேர்ப்பதன் மூலம் Cs3[Ir(GeBr3)nBr6−n] (n=1, 2, 3) சேர்மத்தைப் பிரிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Kandiner, H. J. (2013-09-03). Iridium (in ஜெர்மன்). Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-12128-3.
  2. Perry, Dale L. (2016-04-19). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8.
  3. Livingstone, Stanley E. (2017-01-31). The Chemistry of Ruthenium, Rhodium, Palladium, Osmium, Iridium and Platinum: Pergamon Texts in Inorganic Chemistry, Volume 25 (in ஆங்கிலம்). Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5840-2.
  4. Brodersen, K.; Thiele, G.; Ohnsorge, H.; Recke, I.; Moers, F. (1968-07-01). "Die struktur des IrBr3 und über die ursachen der fehlordnungserscheinungen bei den in schichtenstrukturen kristallisierenden edelmetalltrihalogeniden" (in de). Journal of the Less Common Metals 15 (3): 347–354. doi:10.1016/0022-5088(68)90194-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://dx.doi.org/10.1016/0022-5088%2868%2990194-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(III)_புரோமைடு&oldid=4017277" இலிருந்து மீள்விக்கப்பட்டது