உள்ளடக்கத்துக்குச் செல்

உருத்தேனியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்தேனியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
14014-88-1 Y
ChemSpider 75924
EC number 237-829-4
InChI
  • InChI=1S/3BrH.Ru/h3*1H;/q;;;+3/p-3
    Key: WYRXRHOISWEUST-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 176290
  • Br[Ru](Br)Br
  • [Br-].[Br-].[Br-].[Ru+3]
UNII VJ7MYGN19I Y
பண்புகள்
RuBr3
வாய்ப்பாட்டு எடை 340.782 கி/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர்சாய்சதுரம்[1]
புறவெளித் தொகுதி Pmmn, No. 59
ஒருங்கிணைவு
வடிவியல்
octahedral
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் உருத்தேனியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம்(III) புரோமைடு
இரும்பு(III) புரோமைடு
மாலிப்டினம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


உருத்தேனியம்(III) புரோமைடு (Ruthenium(III) bromide) RuBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியம் தனிமமும் புரோமினும் சேர்ந்து வினைபுரிந்து அடர் பழுப்பு நிறத்தில் உருத்தேனியம்(III) புரோமைடு உருவாகிறது. 400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இச்சேர்மம் சிதைவடைகிறது.[2]

தயாரிப்பு

[தொகு]

720 கெல்வின் வெப்பநிலை மற்றும் 20 பார் அழுத்தத்தில் உருத்தேனியம் தனிமமும் புரோமினும் சேர்ந்து உயர் வெப்பநிலையில் வினைபுரிந்தால் உருத்தேனியம்(III) புரோமைடு உருவாகும் :[3]

2 Ru + 3 Br2 → 2 RuBr3

கட்டமைப்பு

[தொகு]

உருத்தேனியம்(III) புரோமைட்டின் படிக அமைப்புகளில் இணையான (RuBr3)∞ நெடுவரிசைகள் உள்ளன. 384 கெல்வின் வெப்பநிலையில் அதாவது 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருத்தேனியம்(III) புரோமைடு கட்டமாற்றத்திற்கு உட்படுகிறது. இம்மாற்றத்தின் போது நீண்டும் குறுகியும் மாறி மாறி உள்ள Ru-Ru தூரங்களைக் கொண்ட Pnmm இடக்குழுவிலுள்ள நேர்சாய்சதுரக் கட்டமைப்பிலிருந்து TiI3 போன்ற P63/mcm இடக்குழுவில் (சராசரியாக) சமமான Ru-Ru தூரத்துடன் கூடிய ஓர் ஒழுங்கற்ற அறுகோணக் கட்டமைப்பிற்கு மாறுகிறது.[1] சீர்குலைந்த இப்பல்லுருவத்தில் Ru-Ru தூரங்கள் உண்மையில் சமமாக இருப்பதாக தோன்றுவதில்லை, ஆனால் இரண்டு வெவ்வேறு நெடுவரிசை இணக்கங்களின் சீரற்ற விநியோகம் காரணமாக இது இவ்வாறு தோன்றும். இரண்டு பல்லுருவத் தோற்றங்களும் அறுகோண நெருக்கப் பொதிவு புரோமைடு அயனிகளைக் கொண்டிருக்கின்றன. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Hillebrecht, H.; Ludwig, T.; Thiele, G. (2004). "About Trihalides with TiI3 Chain Structure: Proof of Pair Forming of Cations in β-RuCl3 and RuBr3 by Temperature Dependent Single Crystal X-ray Analyses". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 630 (13–14): 2199–2204. doi:10.1002/zaac.200400106. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 1082-1084. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ed.). Prentice Hall. p. 779. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0131755536.
  4. Merlino, S.; Labella, L.; Marchetti, F.; Toscani, S. (2004). "Order−Disorder Transformation in RuBr3 and MoBr3: A Two-Dimensional Ising Model". Chem. Mater. 16 (20): 3895–3903. doi:10.1021/cm049235q. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்தேனியம்(III)_புரோமைடு&oldid=4138822" இலிருந்து மீள்விக்கப்பட்டது