உருத்தேனியம் நாற்குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்தேனியம் நாற்குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
உருத்தேனியம்(IV) குளோரைடு, உருத்தேனியம்(4+) நாற்குளோரைடு
இனங்காட்டிகள்
13465-52-6
ChemSpider 14807928
EC number 236-697-5
InChI
  • InChI=1S/4ClH.Ru/h4*1H;/q;;;;+4/p-4
    Key: IREVRWRNACELSM-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44145691
SMILES
  • [Cl-].[Cl-].[Cl-].[Cl-].[Ru+4]
பண்புகள்
Cl4Ru
வாய்ப்பாட்டு எடை 242.87 g·mol−1
தோற்றம் பழுப்பு நிறப் படிகங்கள்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

உருத்தேனியம் நாற்குளோரைடு (Ruthenium tetrachloride) RuCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியமும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உலோக உப்பு உருவாகிறது.[1][2][3] பழுப்பு நிறத்தில் படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது. குளிர்ந்த நீரில் கரைந்து நீரேற்றை உருவாக்குக்கிறது.[4]


தயாரிப்பு[தொகு]

உருத்தேனியம் ஏழாக்சைடின் மீது ஐதரசன் குளோரைடு வினைபுரிந்தால் உருத்தேனியம் நாற்குளோரைடு உருவாகும்:

RuO4 + 8HCl → RuCl4 + 2Cl2 + 4H2O

இயற்பியல் பண்புகள்[தொகு]

உருத்தேனியம் நாற்குளோரைடு பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. RuCl4·5H2O என்ற நீரேற்றாகவும் உருத்தேனியம் நாற்குளோரைடு உருவாகிறது. குளிர்ந்த நீரிலும் எத்தனாலிலும் இச்சேர்மம் கரையும்.

வேதியியல் பண்புகள்[தொகு]

மந்தவாயுச் சூழலில் உருத்தேனியம் நாற்குளோரைடை சூடுபடுத்தினால் சிதைவடையும்:

RuCl4 → Ru + 2Cl2

சூடான நீருடன் வினைபுரிந்தாலும் இச்சேர்மம் சிதைவுக்கு உட்படும்:

RuCl4 + H2O → [Ru(OH)Cl3] + HCl

காற்றில் உருத்தேனியம் நாற்குளோரைடை சூடுபடுத்தினால் ஆக்சிசனால் இது ஆக்சிசனேற்றமடைகிறது:

RuCl4 + O2 → RuO2 + 2Cl2

பயன்கள்[தொகு]

வேதி வினைகளில் இச்சேர்மம் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]