உருத்தேனியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்தேனியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
உருத்தேனியம் முவயோடைடு
இனங்காட்டிகள்
715652-38-3 Y
InChI
  • InChI=1S/3HI.Ru/h3*1H;/q;;;+3/p-3
    Key: LJZVDOUZSMHXJH-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
SMILES
  • I[Ru](I)I
  • [I-].[I-].[I-].[Ru+3]
பண்புகள்
RuI3
அடர்த்தி 5.25 கிராம் செ.மீ−3
மிகச்சிறிதளவு கரையும்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்[1]
வெப்பவேதியியல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
−247 யூல் மோல்−1 கெல்வின்−1[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் உருத்தேனியம்(III) புளோரைடு
உருத்தேனியம்(III) குளோரைடு
உருத்தேனியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(III) அயோடைடு
ஓசுமியம் அயோடைடு
தெக்னீசியம்(III) அயோடைடு
ரோடியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

உருத்தேனியம்(III) அயோடைடு (Ruthenium(III) iodide) RuI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியமும் அயோடினும் சேர்ந்து கருப்புநிற திண்மமாக இது உருவாகிறது.[2]

தயாரிப்பு முறை[தொகு]

உருத்தேனியம்(III) அயோடைடை தயாரிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.[1][3]

உருத்தேனியம் டெட்ராக்சைடுடன் நீர்த்த ஐதரோ அயோடிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[4]

RuO4 + excess HI → RuI3

பெண்டா அமீன் உருத்தேனியத்தை வெப்பப் பகுப்பு செய்தாலும் உருத்தேனியம்(III) அயோடைடு கிடைக்கிறது:[3]

Ru(NH3)5I3 → RuI3 + 5 NH3

நீரேற்ற உருத்தேனியம்(III) குளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடின் நீரிய கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உப்பிடப்பெயர்வு வினை நிகழ்ந்து உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[1]

RuCl3·xH2O + 3 KI → RuI3 + 3 KCl + xH2O

350 பாகை செல்சியசு வெப்பநிலை போன்ற சில நிபந்தனைகளில் பகுதிக் கூறுகளாக உள்ள தனிமங்கள் இணைந்தும் உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[1]

2 Ru + 3 I2 → 2 RuI3

கட்டமைப்பு[தொகு]

உருத்தேனியத்தில் எண்முக ஒருங்கிணைப்பு வடிவத்துடன் உருத்தேனியம்(III) அயோடைடு நீட்டிக்கப்பட்ட கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. உருத்தேனியம்(III) அயோடைடின் குணாதிசயத்தில் உள்ள ஐயம் காரணமாக இது ஆக்சோ ஆலைடு அல்லது ஐதராக்சி ஆலைடாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது,

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Seddon, Elaine A.; Seddon, Kenneth R. (1984). The Chemistry of Ruthenium. Elsevier. பக். 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-42375-3. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1083. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  3. 3.0 3.1 Cotton, Simon A. (1997). Chemistry of Precious Metals. Springer Netherlands. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780751404135. 
  4. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ). Prentice Hall. பக். 779. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0131755536. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்தேனியம்(III)_அயோடைடு&oldid=3757568" இலிருந்து மீள்விக்கப்பட்டது