உள்ளடக்கத்துக்குச் செல்

ரோடியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோடியம்(III) அயோடைடு
இனங்காட்டிகள்
15492-38-3 N
ChemSpider 76627
EC number 239-521-5
InChI
  • InChI=1S/3HI.Rh/h3*1H;/q;;;+3/p-3
    Key: KXAHUXSHRWNTOD-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4428348
  • [Rh](I)(I)I
பண்புகள்
I3Rh
வாய்ப்பாட்டு எடை 483.62 g·mol−1
தீங்குகள்
GHS labelling:
The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
எச்சரிக்கை
H413
P273, P501
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ரோடியம்(III) புரோமைடு; ரோடியம்(III) குளோரைடு; ரோடியம் முப்புளோரைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

உரோடியம்(III) அயோடைடு (Rhodium(III) iodide) RhI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இது காணப்படுகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

நீரிய பொட்ட்டாசியம் அயோடைடுடன் ரோடியம்(III) புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் உரோடியம்(III) அயோடைடு உருவாகிறது.[1]

RhBr3 + 3KI → RhI3 + 3KBr

கட்டமைப்பு

[தொகு]

அலுமினியம் குளோரைடு (AlCl3), இட்ரியம்(III) குளோரைடு (YCl3) போன்ற சேர்மங்களின் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட அதே படிக கட்டமைப்பையே உரோடியம்(III) அயோடைடும் ஏற்கிறது. கனசதுர நெருக்கப் பொதிவு அயோடைடு அயனிகளும். ரோடியம் அயனிகளும் எண்முக மூலக்கூற்று வடிவத்தின் இடைவெளிகளில் நிரம்பி உருவாகும் அடுக்குகளை இக்கட்டமைப்பு கொண்டுள்ளது. [2]

வினைகள்

[தொகு]

நீரிலி வடிவத்தில் மட்டுமே உரோடியம்(III) அயோடைடு காணப்படுகிறது. நீரேற்றுகளாக இது உருவாவதில்லை.[1] தொடர்புடைய [RhI6]3− என்ற எதிர்மின் அயனியும்[1] உருவாகாது என முன்னதாகக் கூறப்பட்டது. ஆனால் ரோடியம்(III) குளோரைடை (RhCl3·3H2O) ஐதரயோடிக் அமிலம் மற்றும் பிப்பெரசீன் ஆகியவற்றாலான அடுக்கின் வழியாக விரவல் வினைக்கு உட்படுத்தி பின்னர் தயாரிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1119–1120. ISBN 0080379419.
  2. Brodersen, K.; Thiele, G.; Recke, I. (1968). "Strukturuntersuchungen an Rhodiumhalogeniden". J. Less-Common Met. 14 (1): 151–152. doi:10.1016/0022-5088(68)90214-2. 
  3. Bujak, Maciej (2015). "Efficient Diffusion-Controlled Ligand Exchange Crystal Growth of Isostructural Inorganic–Organic Halogenidorhodates(III): The Missing Hexaiodidorhodate(III) Anion". Cryst. Growth Des. 15 (3): 1295–1302. doi:10.1021/cg501694d. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்(III)_அயோடைடு&oldid=4309421" இலிருந்து மீள்விக்கப்பட்டது