ஊக்க வினைவேகமாற்றி
Jump to navigation
Jump to search
ஒரு வினைவேகமாற்றி வினையின் வேகத்தை அதிகப்படுத்தினால் அதற்கு ஊக்க வினைவேகமாற்றி என்று பெயர். இச்செயல்முறை ஊக்க வினைவேக மாற்றம் எனப்படும். ஊக்க வினைவேகமாற்றத்திற்கான சான்றுகள் பின்வருமாறு.
1. கூழ்ம பிளாட்டினத்தின் முன்னிலையில் ஐட்ரசன் பெராக்சைடு சிதைவடைதல் அதிகரிக்கிறது.
- 2H2O2 → 2H2O + O2 (வினைவேகமாற்றி : பிளாட்டினம், Pt)
2. மாங்கனீசு டை ஆக்சைடு முன்னிலையில் பொட்டாசியம் குளோரேட் சிதைவடைதல் அதிகரிக்கிறது.
- 2KClO3 → 2KCl + 3O2 (வினைவேகமாற்றி : மாங்கனீசு டை ஆக்சைடு, MnO2 , வெப்பப்படுத்தப்படுகிறது (Δ))
உசாத்துணை[தொகு]
- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம்