ஓல்மியம்(III) சல்பைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12162-59-3 | |
ChemSpider | 145818 |
EC number | 235-302-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166640 |
| |
பண்புகள் | |
Ho2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 426.04 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சு-மஞ்சள் நிறத் திண்மம்[1] |
அடர்த்தி | 5.92 கி/செ.மீ−3[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஓல்மியம்(III) ஆக்சைடு; ஓல்மியம்(III) செலீனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம்(III) சல்பைடு எர்பியம்(III) சல்பைடு]] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓல்மியம்(III) சல்பைடு (Holmium(III) sulfide) என்பது Ho2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் சல்பைடு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மற்ற அருமண் சல்பைடுகளைப் போலவே இதுவும் உயர் செயல்திறன் கொண்ட கனிம நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]ஓல்மியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடை 1325 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் ஓல்மியம்(III) சல்பைடு கிடைக்கிறது.[2]
- Ho2O3 + 3 H2S → Ho2S3 + 3 H2O
பண்புகள்
[தொகு]ஓல்மியம்(III) சல்பைடு ஆனது ஒற்றைசாய்வு படிக அமைப்பில்[1] P21/m (எண். 11) என்ற இடக்குழுவுடன்[3] ஆரஞ்சு-மஞ்சள் நிறப் படிகங்களைக் கொண்டுள்ளது. உயர் அழுத்தத்தின் கீழ் ஓல்மியம்(III) சல்பைடு கனசதுர மற்றும் செஞ்சாய்சதுர படிக அமைப்புகளில் உருவாகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lide, David R. (2004). CRC Handbook of Chemistry and Physics, 84th Edition. CRC Press. p. 4-60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849304849.
- ↑ G. Meyer; Lester R. Morss, eds. (1991). Synthesis of Lanthanide and Actinide Compounds. Kluwer Academic Publishers. pp. 329–335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0792310187.
- ↑ "Ho2S3: crystal structure, physical properties". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10681735_623. Archived from the original on 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
- ↑ Tonkov, E. Yu (1998). Compounds and Alloys Under High Pressure A Handbook. CRC Press. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5699-047-3.