தங்குதன்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
13470-17-2 Y
ChemSpider 464830
InChI
  • InChI=1S/2HI.W/h2*1H;/q;;+2/p-2
    Key: BMKSRUJKNOBSHP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 533504
SMILES
  • [I-].[I-].[W+2]
பண்புகள்
I2W
வாய்ப்பாட்டு எடை 437.65 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு நிற திண்மம்[1]
அடர்த்தி 6.79 கி·செ.மீ−3[2]
உருகுநிலை 800 °செல்சியசு (சிதைவடையும்)[2]
கரையாது [2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தங்குதன்(II) குளோரைடு
தங்குதன்(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம்(II) அயோடைடு
மாலிப்டினம்(II) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தங்குதன்(II) அயோடைடு (Tungsten(II) iodide) என்பது WI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதன் தனிமத்தின் அயோடைடு உப்பு என வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

தங்குதன்(III) அயோடைடு சேர்மத்தை சிதைவு வினைக்கு உட்படுத்தி தங்குதன்(II) அயோடைடை தயாரிக்கலாம்:[1]

6WI3 -> [W6I8]I4 + 3I2

தங்குதன்(II) குளோரைடுடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இடப்பெயர்ச்சி வினையின் மூலம் தங்குதன்(II) அயோடைடு உருவாகிறது:[1]

[W6Cl8]Cl4 + 12I -> [W6I8]I4 + 12 Cl

தங்குதன் மற்றும் அயோடின் ஆகிய தனிமங்கள் நேரடியாக வினைபுரிவதாலும் தங்குதன்(II) அயோடைடு உருவாகிறது. இது ஒரு மீளக்கூடிய வினையாகும். இந்த வினை ஆலசன் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது:[3]

W + I2 <-> WI2

தங்குதன் அறுகார்பனைலுடன் அயோடின் சேர்ந்து வினைபுரிவதாலும் தங்குதன்(II) அயோடைடு உருவாகிறது.[4]

பண்புகள்[தொகு]

தங்குதன்(II) அயோடைடு அடர் பழுப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. காற்று மற்றும் ஈரப்பதத்தில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. இதன் அமைப்பு தங்குதன்(II) குளோரைடு சேர்மத்தின் படிக அமைப்பை ஒத்துள்ளது. Bbem (எண். 64) என்ற இடக்குழுவில் a = 1258 பைக்கோமீட்டர், b = 1259 பைக்கோமீட்டர், c = 1584 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களில் செஞ்சாய்சதுரப் படிகக்கட்டமைப்பில் தங்குதன்(II) அயோடைடு படிகமாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Handbuch der präparativen anorganischen Chemie. 3 (3., umgearb. Aufl ). Stuttgart: Enke. 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-432-87823-2. 
  2. 2.0 2.1 2.2 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2012). CRC handbook of chemistry and physics: a ready reference book of chemical and physical data (93rd ). Boca Raton: CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-8049-4. 
  3. Latscha, Hans Peter; Mutz, Martin (2011). Chemie der Elemente. Chemie-Basiswissen. Berlin Heidelberg: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-16915-1. 
  4. Johnson, Brian Frederick Gilbert (1972). Inorganic chemistry of the transition elements. A specialist periodical report. London: Chemical society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85186-500-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(II)_அயோடைடு&oldid=3918781" இலிருந்து மீள்விக்கப்பட்டது