தங்குதன் ஐந்தாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தங்குதன் ஐந்தாக்சைடு (Tungsten pentoxide) என்பது W2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பண்டைய நூல்களில் இது சேர்மமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் W18O49 என்ற வேதி விகிதவியல் அளவுகள் நிருபிக்கப்பட்டுள்ளன[1]. சிலவேளைகளில் இச்சேர்மம் நீலக்கனிமம் என்றும் அழைக்கப்படுகிறது. தங்குதன் மூவாக்சைடும் தங்குதன் உலோகமும் 700° செ[1] வெப்பநிலையில் வினைபுரிந்து இந்த நீலநிறத் திண்ம தங்குதன் ஐந்தாக்சைடு உருவாகிறது.

தங்குதனின் இடையின ஆக்சைடுகள்[தொகு]

தங்குதன் மூவாக்சைடும் தங்குதன் உலோகமும் வினைபுரியும் போது வழக்கத்திற்கு மாறான பல இடையின ஆக்சைடுகள் , W20O58, W24O70[1]. W18O49 போன்றவை தோன்றுகின்றன. இவற்றில் எண்முக மற்றும் ஈரைங்கூம்பு உலோக ஒருங்கிணைவுகளை ஆக்சிசன் அணுக்கள் ஏற்படுத்துகின்றன[1].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6