தங்குதன் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்குதன் நைட்ரைடு(Tungsten nitride) W2N, WN, WN2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மங்களாகும்.[1] தங்குதனின் நைட்ரைடு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் கடினமான திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. பழுப்பு நிறத்துடன் பீங்கான் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மின்சாரத்தை நன்கு கடத்தும். தண்ணீரில் இச்சேர்மம் சிதைவடைகிறது.

நுண்மின்னணுவியலில் தங்குதன் நைட்ரைடு ஒரு தொடர்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது கடத்தும் அடுக்குகளுக்கும் தடையடுக்குகளுக்கும் இடையில் சிலிக்கான் மற்றும் பிற உலோகங்களுக்கு இடையே இது பயன்படுத்தப்படுகிறது. எ.கா. தங்குதன் அல்லது தாமிரம். தைட்டானியம் நைட்ரைடு அல்லது தங்குதன் படலங்களை விட தங்குதன் நைட்ரைடு குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

தங்குதன் ஈராக்சைடு, தங்குதன் மூவாக்சைடு மற்றும் தங்குதன் பெண்டாக்சைடு ஆகியவற்றுடன் சேர்ந்து தங்குதன் நைட்ரைடு உருவாகிறது. இதனால் ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தும் போது இழை சூடாக்கப்பட்டால் அவை உடைந்து விடும்.

தங்குதன் சிலிசைடும் இதே பயன்பாடுகளைக் கொண்ட மற்றொரு வேதிப் பொருளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Liu, Chengxiang; Wang, Chao; Meng, Xiangwei; Li, Xingyun; Qing, Qing; Wang, Xianfen; Xue, Ruiying; Yu, Qiang et al. (2020-11-01). "Tungsten nitride nanoparticles anchored on porous borocarbonitride as high-rate anode for lithium ion batteries" (in en). Chemical Engineering Journal 399: 125705. doi:10.1016/j.cej.2020.125705. பன்னாட்டுத் தர தொடர் எண்:1385-8947. https://www.sciencedirect.com/science/article/pii/S1385894720318337. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்_நைட்ரைடு&oldid=3781769" இலிருந்து மீள்விக்கப்பட்டது