காலியம் (II) சல்பைடு
இனங்காட்டிகள் | |
---|---|
12024-10-1 | |
ChemSpider | 4898760 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6370242 |
| |
பண்புகள் | |
GaS• | |
வாய்ப்பாட்டு எடை | 101.788 கி மோல்−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 3.86 கி செ.மீ−3 |
உருகுநிலை | 965 °C (1,769 °F; 1,238 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம், hP8 |
புறவெளித் தொகுதி | P63/mmc, No. 194 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காலியம் (II) சல்பைடு (Gallium(II) sulfide) என்பது GaS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காலியம் மற்றும் கந்தகம் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. Ga-Ga பிணைப்பு[1] இடைவெளி 248 பைக்கோ மீட்டர் நீளமுள்ள Ga24+ அலகுகளைக் கொண்ட அறுகோண அடுக்கு கட்டமைப்பிலிருந்து சாதாரண நிலை காலியம் (II) சல்பைடு உருவாக்கப்படுகிறது. இத்தகைய அடுக்கு கட்டமைப்புகளை GaTe, GaSe மற்றும் InSe [1]சேர்மங்களில் காணமுடியும். இயல்புக்கு மாறான சிற்றுறுதி நிலைப்புத்தன்மையுடைய உருக்குலைந்த உர்ட்சைட் வடிவ காலியம் (II) சல்பைடை கரிமவுலோக வேதியியல் ஆவிப்படிவு முறையைப் பயன்படுத்தி தயாரித்தார்கள். இரண்டு-மூன்று-பியூட்டைல் காலியம் இருதையோ கார்பமேட்டுகள் கரிமவுலோக முன்னோடிகளாக இருந்தன. உதாரணமாக GaAs மீது GatBu2(S2CNMe2) மேலொழுங்கு செய்யப்பட்டது. இம்முறையில் உருவான காலியம் (II) சல்பைடின் கட்டமைப்பு உண்மையெனக் கொள்ளத்தக்க Ga2+ S2− வடிவமாக உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ MOCVD Growth of Gallium Sulfide Using Di-tert-butyl Gallium Dithiocarbamate Precursors: Formation of a Metastable Phase of GaS A. Keys, S G. Bott, A. R. Barron Chem. Mater., 11 (12), 3578 -3587, 1999. எஆசு:10.1021/cm9903632