உள்ளடக்கத்துக்குச் செல்

போரான் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Boron sulfide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
போரான் சல்பைடு
வேறு பெயர்கள்
போரான் செசுகியுசல்பைடு, டைபோரான் டிரைசல்பைடு
இனங்காட்டிகள்
12007-33-9 Y
EC number 234-504-9
InChI
 • InChI=1S/B2S3/c3-1-5-2-4
  Key: ZVTQDOIPKNCMAR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123269
 • S=BSB=S
பண்புகள்
B2S3
வாய்ப்பாட்டு எடை 117.80 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 1.55 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 563 °C (1,045 °F; 836 K)
கொதிநிலை உயர் வெப்பநிலையில் சிதையும்
சிதையும்
கரைதிறன் அமோனியாவில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றை சரிவு, mP40, இட்டக்குழு = P21/c, எண். 14
ஒருங்கிணைவு
வடிவியல்
B: சமதளம், sp2
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-240.6 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
327 யூல்/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 111.7 யூல்/மோல் கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் H2S மூலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

போரான் சல்பைடு (Boron sulfide) என்பது B2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பலபடிசார் பொருளான இது உயர் தொழில்நுட்ப கண்ணாடிகளின் ஓர் அங்கமாகவும், கரிமகந்தகச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கான ஒரு வினையாக்கியாகவும் பயன்படுகிறது. சிலிக்கன் மற்றும் பாசுபரசின் சல்பைடுகளைப் போலவே போரான் சல்பைடும் வளிமண்டல ஈரப்பதம் உட்பட தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் சல்பைடு வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் உப்பு மாதிரிகள் நீரிலி நிலையில் கையாளப்பட வேண்டும். போரான் ஆக்சைடுகளைப் போலவே போரான் சல்பைடும் P4S10 போன்ற பிற சல்பைடுகளுடன் கலக்கும்போது உடனடியாக கண்ணாடிகளை உருவாக்குகிறது. இத்தகைய கண்ணாடிகள் வழக்கமான போரோசிலிகேட் கண்ணாடிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அதிர்வெண் அகச்சிவப்பு ஆற்றலை உறிஞ்சுகின்றன.

கீட்டோன்களை அவற்றுடன் தொடர்புடைய தையோகீட்டோன்களாக போரான் சல்பைடு மாற்றுகிறது. உதாரணமாக பென்சோபீனோனை அதன் தயோனாக மாற்றும் வினை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

B
2
S
3
+ 3 (C
6
H
5
)
2
C=O
B
2
O
3
+ 3 (C
6
H
5
)
2
C=S

நடைமுறையில் இவ்வினைக்கு அதிக அளவான B2S3 பயன்படுத்தப்படுகிறது .[1].

தயாரிப்பு

[தொகு]

இரும்பு அல்லது மாங்கனீசு போரைடுடன் 300° செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டைபோரான் டிரைசல்பைடு தயாரிக்கப்படுகிறது[2]

2 FeB + 4 H2S → B2S3 + FeS + 4 H2

1824 ஆம் ஆண்டு யோன்சு யாகோபு பெர்சிலியசு நேரடியாக படிகவடிமற்ற போரானுடன் கந்தக ஆவியைச் சேர்த்து இதைத் தயாரித்தார்[3]

2 B + 3 S → B2S3

பிரடெரிக் வோலரும் என்றி எட்டியன் செயின்ட்-கிளயிர் டிவில்லியும் மற்றொரு தயாரிப்பு முறையை 1858 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இம்முறையில் போரானும் ஐதரசன் சல்பைடும் தொடக்கப் பொருள்களாகப் பயன்பட்டுத்தப்பட்டன [4][5]

2 B + 3 H2S → B2S3 + 3 H2

கட்டமைப்பு

[தொகு]

B2S3 சேர்மத்திலுள்ள போரான் அணுக்கள் முக்கோண சமதளத்தில் உள்ளன. இவை B3S3 மற்றும் B2S2 வளையங்களில் கந்தக அணுக்கள் 355 பைக்கோமீட்டர் உள்ளடக்கு இடைவெளியில் ஓர் அடுக்கு கட்டமைப்பாக உருவாகியுள்ளன. போரான் டிரையாக்சைடுடன் ஒப்பிடுகையில் இது வேறுபட்ட அமைப்பாகும். போரான் டிரையாக்சைடில் முப்பரிமாண கட்டமைப்பு காணப்படுகிறது[6]. மூலக்கூற்று ஒருபடி வடிவ B2S3 சேர்மம் சமதள V வடிவம் கொண்டு அதன் மைய B-S-B பிணைப்புக் கோணம் தோராயமாக 120°.உடன் கானப்படுகிறது [6].

மேற்கோள்கள்

[தொகு]
 1. Sato, R. (2004). "Encyclopedia of Reagents for Organic Synthesis, 8 Volume Set". Encyclopedia of Reagents for Organic Synthesis. Ed. L. Paquette. New York: J. Wiley & Sons. DOI:10.1002/047084289X.rb255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235. 
 2. Hoffmann, J. (1908). "Synthese von Borsulfid aus Ferro- und Manganbor". Zeitschrift für anorganische Chemie 59 (1): 127–135. doi:10.1002/zaac.19080590116. https://zenodo.org/record/1428114. 
 3. Berzelius (1824). "Undersökning af flusspatssyran och dess märkvärdigaste föreningar". Kongliga Vetenskaps-Academiens Handlingar [Proceedings of the Royal Science Academy] 12: 46–98. https://books.google.com/books?id=pJlPAAAAYAAJ&pg=PA46. 
  Reprinted in German as:
  Berzelius (1824). "Untersuchungen über die Flußspathsäure und deren merkwürdigsten Verbindungen". Annalen der Physik und Chemie 78 (10): 113–150. doi:10.1002/andp.18240781002. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k150878/f123.image.r=Annalen%20der%20Physic.langEN.  see especially pages 145–147.
 4. Friedrich Wöhler; Henri Etienne Sainte-Claire Deville (1858). "Neue Beobachtungen über das Bor und einige seiner Verbindungen". Liebigs Annalen der Chemie und Pharmacie 105 (1): 67–73. doi:10.1002/jlac.18581050109. https://books.google.com/books?id=muE2AAAAYAAJ&pg=PA67#v=onepage&q&f=false. 
 5. Friedrich Wöhler; Henri Etienne Sainte-Claire Deville (1858). "Du Bore". Annales de Chimie et de Physique 52: 62–93. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k347939/f62.table. 
 6. 6.0 6.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_சல்பைடு&oldid=3361858" இலிருந்து மீள்விக்கப்பட்டது