சிலிகான் டைசல்பைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சிலிக்கான்(IV) சல்பைடு
| |
வேறு பெயர்கள்
சிலிக்கான் டைசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
13759-10-9 | |
ChemSpider | 75527 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83705 |
| |
பண்புகள் | |
SiS2 | |
வாய்ப்பாட்டு எடை | 92.218 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிற (மாதிரிகள் சில நேரங்களில் சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்டிருக்கலாம்) ஊசி வடிவம். ஈரக்காற்றில் அழுகிய முட்டை நாற்றமுடிடையது |
அடர்த்தி | 1.853 கி/செமீ3 |
உருகுநிலை | 1,090 °C (1,990 °F; 1,360 K) sublimes |
சிதைவுறுகிறது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oI12 |
புறவெளித் தொகுதி | Ibam, No.72[1] |
ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகி |
தீங்குகள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சிலிக்கா |
ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பன் டைசல்பைடு செர்மானியம் டைசல்பைடு துத்தநாக(IV) சல்பைடு காரீய(IV) சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிலிக்கான் சல்பைடு (Silicon sulfide) SiS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். சிலிக்கான் டை ஆக்சைடைப் போல இந்தப் பொருளும் ஒரு பலபடித்தன்மை வாய்ந்ததாகும். ஆனால் இது மற்ற சிலிக்காவின் வடிவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட 1-பரிமாண வடிவத்தைக் கொண்டுள்ளது.
தொகுப்புமுறை, அமைப்பு, மற்றும் பண்புகள்
[தொகு]இச்சேர்மமானது கந்தகத்தையும், சிலிக்கானையும் வெப்பப்படுத்துவதன் மூலமாக அல்லது SiO2 மற்றும் Al2S3 இவற்றுக்கிடையேயான பரிமாற்ற வினையின் மூலமாகவோ தயாரிக்கப்படலாம். இந்தச் சேர்மமானது முனையங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நான்முகி, Si(μ-S)2Si(μS)2 ஆகியவற்றைக் கொண்ட சங்கிலியமைப்பைக் கொண்டுள்ளது.[2]
மற்ற சிலிக்கான் கந்தக சேர்மங்களைப் போல (உ.ம்., பிஸ்(டிரைமெதில்சிலைல்)சல்பைடு) SiS2 எளிதில் நீராற்பகுக்கப்பட்டு H2S ஐ வெளியிடுகிறது. திரவ அம்மோனியாவில் இச்சேர்மம் இமைடு Si(NH)2 மற்றும் NH4SH ஐத் தருகிறது.[3] ஆனால், தற்போதைய ஆய்வு முடிவு ஒன்று படிக நான்முகி வடிக தயோசிலிகேட்டு எதிரயனியைக் (SiS3(NH3)) கொண்டுள்ள (NH4)2[SiS3(NH3)]·2NH3 விளைபொருளாகக் கிடைப்பதாகத் தெரிவிக்கிறது.SiS3(NH3).[4]
எத்தனால் உடனான வினையானது அல்காக்சைடு, டெட்ராஎதில்ஆர்த்தோசிலிகேட்டு மற்றும் ஐதரசன் சல்பைடைத் (H2S) தருகிறது. சோடியம் சல்பைடு, மக்னீசியம் சல்பைடு மற்றும் அலுமினியம் சல்பைடு உடனான வினைகளானவை தயோசிலிகேட்டுகளைத் தருகின்றன.
அண்டத்தில் குறிப்பிட்ட விண்மீன்களுக்கிடையேயுள்ள பொருட்களில் SiS2 காணப்படுவதாக அறியப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weiss, A.; Weiss, A. (1954). "Über Siliciumchalkogenide. VI. Zur Kenntnis der faserigen Siliciumdioxyd-Modifikation". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 276 (1–2): 95–112. doi:10.1002/zaac.19542760110.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 359. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ Meier, Martin; Korber, Nikolaus (2009). "The first thiosilicate from solution: synthesis and crystal structure of (NH4)2[SiS3(NH3)]·2NH3". Dalton Transactions (9): 1506. doi:10.1039/b818856d. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226.
- ↑ Goebel, J. H. (1993). "SiS2 in Circumstellar Shells". Astronomy and Astrophysics 278 (1): 226–230. Bibcode: 1993A&A...278..226G. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?1993A%26A...278..226G&data_type=PDF_HIGH&whole_paper=YES&type=PRINTER&filetype=.pdf.