மாலிப்டினம் டை சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிப்டினம் இருசல்பைடு
Molybdenum disulfide
Molybdenum disulfide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Molybdenum disulfide
இனங்காட்டிகள்
1317-33-5 Y
ChEBI CHEBI:30704 Y
ChemSpider 14138 Y
InChI
 • InChI=1S/Mo.2S Y
  Key: CWQXQMHSOZUFJS-UHFFFAOYSA-N Y
 • InChI=1/Mo.2S/rMoS2/c2-1-3
  Key: CWQXQMHSOZUFJS-FRBXWHJUAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14823
வே.ந.வி.ப எண் QA4697000
SMILES
 • S=[Mo]=S
பண்புகள்
MoS
2
வாய்ப்பாட்டு எடை 160.07 கி/மோல்[1]
தோற்றம் black/lead-gray solid
அடர்த்தி 5.06 கி/செமீ/cm3[1]
உருகுநிலை 1,185 °C (2,165 °F; 1,458 K) decomposes
கரையாதது[1]
கரைதிறன் இராச திராவகம், சூடான சல்பூரிக் அமிலம், நைட்ரிக் காடி ஆகியவற்றில் உருச்சிதையும்
செறிவற்ற அமிலங்களில் கரையாது
Band gap 1.23 eV (2H)[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு hP6, space group P6
3
/mmc, No 194 (2H)

hR9, space group R3m, No 160 (3R)[3]

Lattice constant a = 0.3161 nm (2H), 0.3163 nm (3R), c = 1.2295 nm (2H), 1.837 (3R)
ஒருங்கிணைவு
வடிவியல்
Trigonal prismatic (MoIV)
Pyramidal (S2−)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாலிப்டனம்(IV) ஆக்சைடு
மாலிப்டனம் இருசெலினைடு
Molybdenum ditelluride
ஏனைய நேர் மின்அயனிகள் Tungsten disulfide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மாலிப்டினம் இருசல்பைடு (Molybdenum disulfide) என்பது MoS
2
என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமவேதிச் சேர்மம் ஆகும்.

இந்தச் சேர்மம் உலோக டை-காற்கோசனைடு வகையைச் சார்ந்தது. இது ஒரு வெள்ளிய கருப்பு நிறப் படிகம், இது மாலிப்டினத்தின் முதன்மைத் தாதுவான மாலிப்டினைட்டு என்ற வடிவில் பூமியில் கிடைக்கிறது.[4] MoS
2
எளிதில் வேதிய வினைபுரியாத சேர்மமாகும். இது நீர்த்த அமிலத்தினாலோ, ஆக்சிசனாலோ பாதிக்கப்படாதது. மாலிப்டினம்-டை-சல்பைடு கடுங்கரியை ஒத்த தோற்றமுடையது. இதன் குறைந்த உராய்வுப் பண்பாலும், தன்முனைப்புத் திறனாலும் திட உயவுப்பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தி[தொகு]

மாலிப்டினைட்டு

தூய்மையான MoS
2
, மாலிப்டினைட்டு கனிமத்தில் இருந்து நுரை மிதப்பு முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது, இம்முறையில் பிரித்தெடுக்கும் போது கரிமம் முக்கிய மாசுப்பொருளாக உள்ளது.

பல்வேறு மாலிப்டினம் சேர்மங்களை ஐதரசன் சல்பைடுடன் வெப்ப வினைக்கு உட்படுத்தியும் மாலிப்டினம் இருசல்பைடை உற்பத்தி செய்யலாம்.[5]

வடிவமைப்பு, இயற்பியல் பண்புகள் [தொகு]

மாலிப்டினம் டை சல்பைடின் ஒற்றையடுக்கு மென்படலத்தின் மின்துகள் நுண்துபடம் . ஒப்பளவு நீளம்: 1 nm.[6]

MoS
2
வழக்கமாக ஒப்பான வடிவமுடைய இரண்டு முக்கிய பலபடி வகைகளான 2H, 3R ஐ உள்ளடக்கிய கலவையாக உள்ளது, 2H வகை அதிகளவில் நிறைந்துள்ளது. 2H-MoS
2
-இல் ஒவ்வொரு Mo(IV) மையமும் முக்கோணப் பட்டகத்தில் ஆறு சல்பைடு ஈந்தணைவிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சல்பர் மையமும் பிரமிடு போன்ற முக்கோணப் பட்டகத்தின் உச்சியில் மூன்று  Mo மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, பற்பல முக்கோணப் பட்டகததை ஒன்றுடன் ஒன்று ஒரு அடுக்கில் இணைக்கும் போது மெல்லிய இழைபோன்ற ஒற்றையடுக்கு வடிவமுடைய மாலிப்டினம் இருசல்பைடு கிடைக்கும். இதில் மாலிப்டினம் அணு அடுக்கு இரண்டு சல்பர் அணு அடுக்குகளுக்கிடையில் அமைந்திருக்கிறது.[7] இரண்டு MoS
2
மென்படலங்களுக்கு இடையே உள்ள சல்பைடு அணுக்களின் வலுவற்ற வான் டெர் வால்ஸ் விசையால், MoS
2
 குறைந்த உராய்வைக் கொண்டுள்ளது, இதனால் இது சிறந்த உயவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.[8]

வேதிவினைகள்[தொகு]

மாலிப்டினம்-டை-சல்பைடு சூழலில் அதிக நிலைத்தன்மை உடையது, வீரியமிக்க காரணிகளுடனே வினைபுரியும் தன்மை கொண்டது. இது ஆக்சிசனுடன் வெப்ப வினைக்கு உட்படும்போது மாலிப்டினம்-டிரை-ஆக்சைடை கொடுக்கிறது.

உயர்ந்த வெப்ப நிலைகளில் மாலிப்டினம் டை ஆக்சைடு குளோரினுடன் வினைபுரிந்து மாலிப்டினம் பெண்டாகுளோரைடை கொடுக்கிறது.

மாலிப்டினம் டை சல்பைடு இடைபுகுத்தப்பட்ட சேர்மங்களைத் தோற்றுவிக்க வழங்கியாக செயல்படுகிறது.[9] ஒரு உதாரணம் இலித்தியமேற்றப்பட்ட மூலப்பொருள், Li
x
MoS
2
.[10] பியூட்டைல் இலித்தியத்துடன் இலித்தியமேற்றம் அடைந்து LiMoS
2
ஐத் தோற்றுவிக்கிறது.[4]

பயன்பாடுகள் [தொகு]

உயவுப்பொருளாக [தொகு]

1–100 µm அளவுடைய MoS
2
துகள்கள் உலர்ந்த உயவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.[11]

பெட்ரோலியம் தூய்மைப்படுத்தல்[தொகு]

MoS
2
பெட்ரோ வேதியியலில் கந்தக நீக்கு வினைகளில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[12]

நீர் பிளப்பு வினை [தொகு]

MoS
2
மின்னாற்பகுப்பு முறையில் நீரிலிருந்து ஐதரசனையும் ஆக்சிசனையும் பிரித்தெடுக்கும் வினையில் ஆகச்சிறந்த வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
 2. Kobayashi, K.; Yamauchi, J. (1995). "Electronic structure and scanning-tunneling-microscopy image of molybdenum dichalcogenide surfaces". Physical Review B 51 (23): 17085. doi:10.1103/PhysRevB.51.17085. 
 3. Schönfeld, B.; Huang, J. J.; Moss, S. C. (1983). "Anisotropic mean-square displacements (MSD) in single-crystals of 2H- and 3R-MoS2". Acta Crystallographica Section B Structural Science 39 (4): 404. doi:10.1107/S0108768183002645. 
 4. 4.0 4.1 Sebenik, Roger F. et al. (2005) "Molybdenum and Molybdenum Compounds" in Ullmann's Encyclopedia of Chemical Technology. Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_655 10.1002/14356007.a16_655
 5. Murphy, Donald W.; Interrante, Leonard V.; Kaner; Mansuktto (1995). "Metathetical Precursor Route to Molybdenum Disulfide". Inorganic Syntheses. Inorganic Syntheses 30: 33–37. doi:10.1002/9780470132616.ch8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132616. 
 6. Hong, J.; Hu, Z.; Probert, M.; Li, K.; Lv, D.; Yang, X.; Gu, L.; Mao, N. et al. (2015). "Exploring atomic defects in molybdenum disulphide monolayers". Nature Communications 6: 6293. doi:10.1038/ncomms7293. பப்மெட்:25695374. Bibcode: 2015NatCo...6E6293H. 
 7. Wells, A.F. (1984). Structural Inorganic Chemistry. Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-855370-6. https://archive.org/details/structuralinorga0000well_m8i1. 
 8. Thorsten Bartels; and others (2002). "Lubricants and Lubrication". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley VCH. doi:10.1002/14356007.a15_423. 
 9. Benavente, E.; Santa Ana, M. A.; Mendizabal, F.; Gonzalez, G. (2002). "Intercalation chemistry of molybdenum disulfide". Coordination Chemistry Reviews 224: 87–109. doi:10.1016/S0010-8545(01)00392-7. 
 10. Müller-Warmuth, W. and Schöllhorn, R. (1994). Progress in intercalation research. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7923-2357-2. https://books.google.com/books?id=IyB_rPo3osUC&pg=PA50. 
 11. Claus, F. L. (1972) Solid Lubricants and Self-Lubricating Solids, Academic Press, New York.
 12. Topsøe, H.; Clausen, B. S.; Massoth, F. E. (1996). Hydrotreating Catalysis, Science and Technology. Berlin: Springer-Verlag. 
 13. Kibsgaard, Jakob; Jaramillo, Thomas F.; Besenbacher, Flemming (2014). "Building an appropriate active-site motif into a hydrogen-evolution catalyst with thiomolybdate [Mo3S13]2− clusters". Nature Chemistry 6 (3): 248–253. doi:10.1038/nchem.1853. பப்மெட்:24557141. Bibcode: 2014NatCh...6..248K.