செருமேனியம் மோனோசல்பைடு
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
செருமேனியம்(II) சல்பைடு | |
இனங்காட்டிகள் | |
12025-32-0 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
செருமேனியம் மோனோசல்பைடு (Germanium monosulfide) என்பது GeS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை செருமேனியம்(II) சல்பைடு என்ற பெயராலும் அழைப்பார்கள். செம்பழுப்பு நிறத் தூளாக அல்லது கருப்பு நிறப் படிகங்களாக செருமேனியம் மோனோசல்பைடு காணப்படுகிறது [1]. உலர்நிலையில் உள்ள போது செருமேனியம்(II) சல்பைடு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் ஈரக்காற்றில் இது மெல்ல நீராற்பகுப்பு அடைகிறது. தண்ணிருடன் வேகமாக வினைபுரிந்து செருமேனியம்(II) ஐதராக்சைடையும் பின்னர் செருமேனியம்(II) ஆக்சைடையும் கொடுக்கிறது. வெற்றிடத்தில் சிதைவடையாமல் பதங்கமாகும் சில சல்பைடுகளில் இதுவும் ஒன்றாகும் [2] It is one of a few sulfides that can be sublimed under vacuum without decomposition.[3].
தயாரிப்பு
[தொகு]செருமேனியம் டைசல்பைடை (GeS2) செருமேனியத்துடன் சேர்த்து ஒடுக்குவதன் மூலம் செருமேனியம் மோனோசல்பைடு விங்லெர் என்பவரால் முதலில் தயாரிக்கப்பட்டது. [2] ஐதரசன் வாயுக் கற்றை[2] அல்லது அதிகப்படியான ஐப்போபாசுப்பரசு அமிலம் (|H3PO2) செலுத்தி தொடர்ந்து வெற்றிடத்தில் பதங்கமாகச் செய்வதன் மூலமாகவும் இதைத் தயாரிக்க முடியும்.[1]
கட்டமைப்பு
[தொகு]கருப்பு பாசுபரசைப் போல அடுக்குக் கட்டமைப்புடன் செருமேனியம் மோனோசல்பைடு காணப்படுகிறது [1]. Ge-S பிணைப்பு நீளம் 247 முதல் 300 பைக்கோ மீட்டர்களாகும் [2]. மூலக்கூற்று GeS வாயு நிலையில் Ge-S பிணைப்பின் பிணைப்பு நீளம் 201.21 பைக்கோமீட்டர்களாகும் [4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 2.0 2.1 2.2 2.3 E. G. Rochow, E. W. Abel ,1973, The Chemistry of Germanium Tin and Lead, Pergamon Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-018854-0
- ↑ Michael Binnewies, Robert Glaum, Marcus Schmidt, Peer Schmidt, 2012, Chemical Vapor Transport Reactions, De Gruyter, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-025464-8
- ↑ Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.