சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு
Sodium thioantimoniate
சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டெட்ராதயோ ஆண்டிமோனியேட்டு(V)
பண்புகள்
Na3SbS4·9H2O
தோற்றம் மஞ்சள் நிற படிகங்கள்
அடர்த்தி 1.806 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 87 °C (189 °F; 360 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் தயோ ஆண்டிமோனியேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு (Sodium thioantimoniate) என்பது Na3SbS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் ஒன்பது நீரேற்று வடிவம் சிகிலிப்பெசு உப்பு என்ற பெயரால் அறியப்படுகிறது. 1799-1867 காலத்தைச் சேர்ந்த கே.எப். சிகிலிப்பெ என்பவர் இந்த உப்பைக் கண்டறிந்தார். சல்போ உப்புகளுக்கு இவை எடுத்துக்காட்டுகளாகும். கனிம வேதியியல் பண்பறி பகுப்பாய்வுகளில் இவை ஒருகாலத்தில் இன உருவாக்கிகளாக கவனத்தை ஈர்த்தன.

கட்டமைப்பு[தொகு]

நீரேறிய இவ்வுப்பு நான்முக SbS43− எதிர்மின் அயனியையும் (rSb-S = 2.33 Å), நீரேறிய சோடியம் நேர்மின் அயனிகளையும்[1][2] கொண்டுள்ளது. அமோனியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வேறுபட்ட நேர்மின் அயனிகள் தொடர்புள்ள உப்புகளாக அறியப்படுகின்றன.

நான்முக சோடியம் மற்றும் ஆண்டிமனி தளங்கள் கொண்ட பலபடியாக நீரற்ற உப்பு அறியப்படுகிறது[3].

தயாரிப்பு[தொகு]

ஆண்டிமனி டிரைசல்பைடும் தனிமநிலை கந்தகம் மற்றும் ஒரு நீரிய சல்பைடு மூலம் ஆகியன வினைபுரிவதால் சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு உருவாகிறது.

3 Na2S + 2 S + Sb2S3 + 9 H2O → 2 Na3SbS4•9 H2O

கந்தகத்தை சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து வெப்ப வினைக்கு உட்படுத்தி வினைக்குத் தேவையான சல்பைடை மறைமுகமாகவும் உற்பத்தி செய்து கொள்ள இயலும்.

Sb2S3 + 8 NaOH + 6 S → 2 Na3SbS4 + Na2SO4 + 4 H2O

மற்றொரு தயாரிப்பு முறையில் 16 பங்கு சோடியம் சல்பேட்டு, 4-5 பங்கு மரக்கரி, 13 பங்கு ஆண்டிமனி சல்பைடு ஆகியன சேர்ந்த கலவை ஒடுக்க வினைக்கு உட்படுத்தப்படுகின்றன. உருவாகும் உருகலை தண்ணிருடன் சேர்த்து பிரித்தெடுத்து நான்கு பங்கு கந்தகம் சேர்த்து சூடுபடுத்துகிறார்கள். கரைசலை ஆவியாக்கும்போது சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு படிகமாகிறது. பெரிய நான்முகியான இது நீரில் கரைகிறது. நீரற்ற உப்பை எளிதாகச் சூடுபடுத்தி உருக்க முடியும். நீரேறிய நிலையில் ஈரக்காற்றில் சிவப்பு படலம் உருவாகிறது.

தேவையான ஆண்டிமனி(III) சல்பைடு நேரடியாக ஆண்டிமனி(III) சேர்மம் ஒன்றுடன் சல்பைடு மூலங்கள் ஒன்றைச் சேர்த்து சுடுபடுத்தி வழக்கமான தயாரிப்பு முறையில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது.

2 SbCl3 + 3 H2S → Sb2S3 + 6 HCl

வினைகள்[தொகு]

நீரேற்று வடிவம் தண்ணீரில் கரைந்து நான்முக SbS43− அயனியைத் தருகிறது. உப்பை அமிலமாக்கல் வினையின் மூலம் குயின்சல்பைடு ஆண்டிமனியாக மாற்றலாம்.

2 Na3SbS4 + 6 HCl → Sb2S5 + 6 NaCl + 3 H2S

மேற்கோள்கள்[தொகு]

  1. Krebs, B., "Thio- and Seleno Compounds of Main Group Elements - New Inorganic Oligomers and Polymers", Angewandte Chemie, 1983, volume 95, pages 113-34.
  2. K. Mereiter, A. Preisinger and H. Guth "Hydrogen bonds in Schlippe's salt: refinement of the crystal structures of Na3SbS4.9H2O by X-ray diffraction and Na3SbS4.9D2O by neutron diffraction at room temperature" Acta Crystallographica 1979, vol. B35, 19-25. எஆசு:10.1107/S0567740879002442.
  3. H. A. Graf, H. Schäfer "Zur Strukturchemie der Alkalisalze der Tetrathiosäuren der Elemente der 5. Hauptgruppe (pages 67–80) Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 1976, vol. 425, p67-p80. எஆசு:10.1002/zaac.19764250109