உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்சனிக் பென்டாசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்சனிக் பென்டாசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக் பென்டாசல்பைடு
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(V) சல்பைடு
டையார்சனிக் பென்டாசல்பைடு
இனங்காட்டிகள்
1303-34-0 N
ChemSpider 2617071 Y
InChI
  • InChI=1S/As2S5/c3-1(4)7-2(5)6 Y
    Key: AYRZLUSHOXJGKY-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/As4S10/c5-1-9-2(6)12-3(7,10-1)14-4(8,11-1)13-2
    Key: CHQYGMAMCBQSIU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 3371533
  • S=[As](=S)S[As](=S)=S
  • S=[As]12S[As]3(=S)S[As](=S)(S1)S[As](=S)(S2)S3
UN number 1557
பண்புகள்
As2S5
வாய்ப்பாட்டு எடை 310.14 g·mol−1
தோற்றம் தெளிவான, அடர் ஆரஞ்சு நிற, ஒளிபுகாத படிகங்கள்
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)(குறைவு)
கொதிநிலை 500 °C (932 °F; 773 K)(சிதைவடையும்)
0.014 கிராம் டெ.மீ−3 (0 °செல்சியசில்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு விஷம் T சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள் R23/25, R50/53
S-சொற்றொடர்கள் S20/21, S28, S45, S60, S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆர்சனிக் பென்டாசல்பைடு (Arsenic pentasulfide) என்பது As2S5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக் மற்றும் கந்தகம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சிவப்பு நிறமான இத்திண்மத்தின் அடையாளம் நிச்சயமற்றதாக உள்ளது[1]. எனவே தோராயமாக As2S5 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட சேர்மங்கள் நிறமிகளாகவும் வேதியியல் இடைநிலைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பொதுவாக கல்வியியல் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகின்றன[2].

தயாரிப்பு

[தொகு]

கரையக்கூடிய As(V) உப்புகளின் அமிலக் கரைசலை ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து சூடுபடுத்தி விழ்படிவாக்கி ஆர்சனிக் பென்டாசல்பைடு தயாரிக்கப்படுகிறது [3]. ஆர்சனிக் மற்றும் கந்தகக் கலவையை சூடுபடுத்தி அதன் இளகிய கலவையை அமோனியா கரைசலுடன் பிரித்தெடுத்து தாழ் வெப்பநிலையில் ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து ஆர்சனிக் பென்டாசல்பைடு வீழ்படிவாக்கப்படுகிறது.

P4S10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட பாசுபரசு பென்டாசல்பைடு நான்முக பாசுபரசு(V) மையங்களை கொண்ட மூலக்கூற்று சேர்மமாகத் தோற்றமளிக்கிறது. As2S5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஆர்சனிக் பென்டாசல்பைடும் இதே கட்டமைப்பை ஏற்பதாக ஆர்சனிக்கின் ஒடுக்கும் திறன்கள் பரிந்துரைக்கின்றன. இயலக்கூடிய மற்றொரு சாத்தியமான கட்டமைப்பு ஆர்சனிக் பல்சல்பைடு கட்டமைப்பாகும்.

வினைகள்

[தொகு]

கொதிக்கும் தண்ணீரில் ஆர்சனிக் பென்டாசல்பைடு ஆர்சனசு அமிலம் மற்றும் கந்தகமாக நீராற்பகுப்பு அடைகிறது.

As2S5 + 6 H2O → 2 H3AsO3 + 2 S + 3 H2S

உயர் வெப்பநிலைகளில் இது காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து ஆர்சனிக் ஆக்சைடுகளை உருவாக்குகிறது. விளைபொருள்களும் அவற்றின் அளவும் மாறுபடுகின்றன. கார உலோக சல்பைடு கரைசல்களில் இது தயோ ஆர்சனேட்டு எதிர்மின் அயனியாக [AsS4]3− மாறுகிறது. இவ்வயனியில் As(V) மையங்கள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. A. L. Emelina, A. S. Alikhanian, A. V. Steblevskii and E. N. Kolosov "Phase diagram of the As-S system" Inorganic Materials, 2007, Volume 43, pages95-104, எஆசு:10.1134/S002016850702001X
  3. ed. by N. C. Norman. (1998). Chemistry of arsenic, antimony and bismuth. London: Blackie Acad. & Professional. pp. 114–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0389-3. {{cite book}}: |author= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சனிக்_பென்டாசல்பைடு&oldid=2748486" இலிருந்து மீள்விக்கப்பட்டது