பெர்க்கிலியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்க்கிலியம்(III) நைட்ரேட்டு

பெர்க்கிலியம்(III) நைட்ரேட்டு கரைசல்
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பெர்க்கிலியம் முந்நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Bk+3]
பண்புகள்
Bk(NO3)3
வாய்ப்பாட்டு எடை 433.01 கி/மோல்
தோற்றம் இளம் பச்சை திண்மம்[1]
உருகுநிலை 450 °C (842 °F; 723 K)[1] சிதையும்
கரைதிறன் நைட்ரிக் அமிலத்தில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Radioactive
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெர்க்கிலியம்(III) நைட்ரேட்டு (Berkelium(III) nitrate) Bk(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக Bk(NO3)3·4H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நீரேற்றாகவே இச்சேர்மம் உருவாகிறது. இளம் பச்சை நிறத்தில் ஒரு திண்மமாக இந்நீரேற்று காணப்படுகிறது. 450 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் பெர்க்கிலியம்(III) நைட்ரேட்டு சிதைவடைந்து பெர்க்கிலியம்(IV) ஆக்சைடாக மாறுகிறது.

தயாரிப்பு முறை[தொகு]

பெர்க்கிலியம் உலோகம் அல்லது பெர்க்கிலியம் ஐதராக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் பெர்க்கிலியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது.[1]

பயன்கள்[தொகு]

வர்த்தகப் பயன்கள் ஏதுமில்லை என்றாலும் டென்னிசின் தனிமத்தை தயாரிக்க பயன்படுகிறது. நீரிய பெர்க்கிலியம்(III) நைட்ரேட்டை தைட்டானியம் மென்தகட்டின் மீது பூசி கால்சியம்-48 அணுக்களால் மோதச் செய்தால் டென்னிசின் உருவாகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Haire, R. G., Proc. Rare Earth Res. Conf., loth, Carefree, Arizona, April-May, p. 882 (1973) doi:10.2172/4549027
  2. J. B. Roberto; K. P. Rykaczewski (2016). "Discovery of element 117: Super-heavy elements and the “island of stability”" (in en). Separation Science and Technology (12): 1813-1819. doi:10.1080/01496395.2017.1290658.