காலியம் நைட்ரேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
காலியம் டிரைநைட்ரேட்டு
| |
வேறு பெயர்கள்
காலியம்(III) நைட்ரேட்டு
நைட்ரிக் அமிலத்தின் காலிய உப்பு | |
இனங்காட்டிகள் | |
13494-90-1 | |
ChEMBL | ChEMBL1200983 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61635 |
| |
UNII | Y2V2R4W9TQ |
பண்புகள் | |
Ga(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 255.7377 கி/மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | O Xi |
R-சொற்றொடர்கள் | R8 R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S17 S26 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காலியம் நைட்ரேட்டு (Gallium nitrate) என்பது நைட்ரிக் அமிலத்தின் காலியம் உப்பு (வேதியியல்) ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ga(NO3)3 ஆகும். இது இரத்த சர்க்கரை மிகைப்பு நோய்க்குறிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப்பொருளாகும். எலும்பு அழிப்பு செல்களின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் எலும்பு முறிவதைத் தடுப்பதற்கு இது உதவுகிறது, இதனால் இரத்தத்தில் தனித்த கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது[1][2] காலியம் நைட்ரேட்டு இதர காலியம் சேர்மங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
வரலாறு
[தொகு]காலியம் (Ga) தனிமமானது 1875 ஆம் ஆண்டில் பி. ஈ. லீகாக் டி போய்ஸ்பாவ்த்ரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[3] காலியம் அதன் பெரும்பாலான சேர்மங்களில் 3+ ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. காலியமானது அணைவுச் சேர்மங்கள் உருவாக்கத்தின் போது இரும்பு 3+ ஐப் போல் செயல்படுகிறது.[4] அதாவது காலியம்(III) மற்றும் இரும்பு(III) ஆகியவை ஒரே அணைவு எண், மின்சுமை, அயனி விட்டம், எதிர்மின்னி அமைப்பு ஆகியவற்றில் ஒத்ததாக உள்ளன.
உயிரியல் செயல்பாடு
[தொகு]குறைவான செறிவுகளில் காலியம் அணுக்கள் Gallium atoms are bound to the phosphates of டி.என்.ஏக்களின் பாசுபேட்டுகளுடன் பிணைக்கப்பட்டு ஒரு நிலைத்தன்மை உடைய அணைவுச் சேர்மத்தை உருவாக்குகின்றன.[5] காலியத்தின் டி.என்.ஏ விற்கான நாட்டமானது மக்னீசியத்தைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமாக இருக்கும் காரணத்தால், டி. என். ஏ பிணைப்பில் காலியமானது, மக்னீசியத்துடன் போட்டி போடுகிறது. உலோகம் மற்றும் டி.என்.ஏ தளங்களோடு எந்த இடைவினைகளும் கண்டறியப்படவில்லை.[6] எட்லி எட் அல்லின் கூற்றுப்படி காலியமானது, டி.என்.ஏ தொகுப்பு நகல் ஆக்கத்தைத் தடை செய்கிறது. முதன்மையான, காலியத்தின் தெரிவு செய்யப்பட்ட இலக்காக ரைபோநியூக்ளியோடைடு ரெடக்டேசு இருக்கிறது.[6] கூடுதலாக, காலியமானது டிரான்ஸ்ஃபெர்ரினுடன் இரும்பினைக் காட்டிலும் வலிமையாக பிணைக்கப்படுகிறது. இதை சிதம்பர் என்பவர் அறிவித்தார். டிரான்ஸ்ஃபெர்ரின் காலியம் அணைவுச் சேர்மங்கள் டி.என்.ஏ தொகுப்பினை ரைபோநியூக்ளியோடைடு ரெடக்டேசு தடுப்பிகளின் எம்2 உபஅலகுகளின் மீது செயல்படுவதன் மூலம் தடுக்கின்றன.[7]வளர்சிதை மாற்றச் செயல்களில் பல்வேறு அயனிகளின் (Ca2+, Mg2+, Fe2+ மற்றும் Zn2+) செயல்களில் காலியம்(III) ஒரு எதிர்வினையூக்கியாகச் செயல்படுதாகத் தோன்றுகிறது. எலும்பு வளர்சிதைமாற்றத்தில் காலியத்தின் செயல் புற்றுநோயுடன் தொடர்புடைய இரத்த சர்க்கரை மிகைப்பினைக் குறைக்கிறது. இருப்பினும், செல்களுக்குள் இலைசோசோம்களில் காலியமானது உப்பாகக் காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]காலியம் நைட்ரேட்டு வணிகரீதியாக நைட்ரேட்டாக கிடைக்கிறது. மோனோஐதரேட்டானது காலியத்தை நைட்ரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலமும், அதைத் தொடர்ந்து மறுபடிகமாக்குதல் மூலமும் தயாரிக்கப்படுகிறது.[8] காலியம் நைட்ரேட்டு மோனாேஐதரேட்டின் அமைப்பானது எக்சு கதிர் படிகவியல் முறையில் கண்டறியப்பட்டுள்ளது.[9]
பயன் மற்றும் தயாரிப்பு முறை
[தொகு]காலியம் நைட்ரைடை காலியம் நைட்ரேட்டிலிருந்து தயாரிக்கும் முறை
[தொகு]காலியம் நைட்ரைடு தூளானது காலியம் நைட்ரேட்டு உப்பை ஓடும் அம்மோனியாவில் உயர் வெப்பநிலையில் (500-1050 °செல்சியசு) வெப்பப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பானது காலியம் நைட்ரைடாக மாறுகிறது.[10]
மருந்தியல் தகவல்கள்
[தொகு]காலியம் நைட்ரேட்டு ஊசி மருந்துத் திரவமானது தெளிவான, நிறமறற, நோய்நுண்மத் தீர்வாக்கம் செய்யப்பட்ட காலியம் நைட்ரேட்டு உப்புக் கரைசலாகும். இந்த நிலைத்தன்மை உடைய, மோனோஐதரேட்டு, Ga(NO3)3•9H2O ஒரு வெண்ணிற, மிதமான நீர் உறிஞ்சும் தன்மை உடைய, படிக வடிவமுள்ள, 417.87 கிராம மூலக்கூறு நிறையுள்ள, நீரில் எளிதில் கரையக்கூடிய ஒரு சேர்மமாகும். ஒவ்வொரு மிலி காலியம் நைட்ரேட்டு ஊசித் திரவமும் 25 மிகி(நீரற்ற வடிவம்) மற்றும் சோடியம் சிட்ரேட்டு டைஐதரேட்டு 28.75 மில்லிகிராமும் கொண்டுள்ளது. இந்தக் கரைசலின் pH மதிப்பை 6.0-7.0 என்ற அளவில் நிர்வகி்ப்பதற்காக சோடியம் ஐதராக்சைடு அல்லது ஐதரோகுளோரிக் காடி இதனுடன் சேர்க்கப்படலாம்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gallium Nitrate monograph. Lexi-Comp Online, Lexi-Drugs Online, Lexi-Comp Inc. Hudson, OH. Available at: [1] பரணிடப்பட்டது 2004-11-16 at the வந்தவழி இயந்திரம். Accessed September 13th, 2008.
- ↑ Ganite at drugs.com
- ↑ Green MA and Welch MJ: Gallium radiopharmaceutical chemistry. Int J Rad Appl Instrum B 16: 435-448, 1989
- ↑ Hart MM and Adamson RH: Antitumor activity and toxicity of salts of inorganic group 3a metals: aluminum, gallium, indium, and thallium. Proc Natl Acad Sci USA 68: 1623-1626, 1971
- ↑ Hart MM, Smith CF, Yancey ST and Adamson RH: Toxicity and antitumor activity of gallium nitrate and periodically related metal salts. J Natl Cancer Inst 47: 1121-1127, 1971
- ↑ 6.0 6.1 MANFAIT M and Collery P: Etude in vitro par spectroscopie Raman de la conformation d'un ADN sous l'influence des ions magnésium et gallium. Magnesium Bull 4: 153-155, 1984
- ↑ Hedley DW, Tripp EH, Slowiaczek P and Mann GJ: Effect of gallium on DNA synthesis by human T-cell lymphoblasts. Cancer Res 48: 3014-3018, 1988
- ↑ Birnara, Christiana; Kessler, Vadim G.; Papaefstathiou, Giannis S. (2009). "Mononuclear gallium(III) complexes based on salicylaldoximes: Synthesis, structure and spectroscopic characterization". Polyhedron 28 (15): 3291. doi:10.1016/j.poly.2009.04.039.
- ↑ Hendsbee, Arthur; Pye, Cory; Masuda, Jason (2009). "Hexaaquagallium(III) trinitrate trihydrate". Acta Crystallographica E 65: i65. doi:10.1107/S1600536809028086.
- ↑ Balkas_, C. M.; Davis, R. F. J. Am. Ceram. Soc. 1996, 79, 2309
- ↑ Gallium Nitrate. National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine. April 13th, 2012
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |